
அடுத்தவரின் இயலாமையை பார்த்து உடனடியாக சிரிப்பது நமக்கு கைவந்த கலை…என்ன வேலையாக எப்படி இருந்தாலும் எந்த மனநிலையில் இருந்தாலும்…
ஒருவரது இயலாமையை காணும்போது…உடனடியாக சிரிப்போ ஒரு புன்முறுவலோவாவது வந்து ஒட்டிக்கொள்ளும்…அது நமது அறியாமைதான்…
சிலர் அதனையே பழக்கமாக்கி வைத்திருப்பர்…தேடி தேடி..அடுத்தவர் சிரமங்களை.. கஷ்டங்களை ரசிக்கும் குரூர எண்ணமும் உடையோர் உண்டு…
தவறுதான்..எந்த தவறையுமே திரும்ப திரும்ப செய்யும்போதுதான்.. அது கெட்ட பழக்கமாகின்றது..பின்பு அதனை விடமுடிவதில்லை…
அப்படியே மனோவசியத்தின் மூலமோ…சில பயற்சிகள் மூலமோ விட நேர்ந்தாலும் அதற்கு பதிலாக வேறு ஒரு கெட்ட பழக்கத்தை பழகியிருப்போம்…
அதுவே திரும்ப நாளடைவில் மற்றொரு கெட்ட பழக்கமாகின்றது.. பெரும்பாலான பிழைகள் தெரிந்தே செய்வதில்லை… ஆனால் தொடர்ந்து செய்கின்றபோது மற்றவர் நமக்கு புத்தி சொல்லுமளவிற்கு…மற்றவர் கண்ணை உறுத்துமளவிற்கு பெரும் பிழையாகின்றது…
எந்த பிழையாக இருந்தாலும் நாமே மனது வைத்தால் ஆரம்ப நிலையிலேயே முற்றிலும் களைந்துவிடமுடியும்… மற்றவ்ர் சொல்லுக்கு அல்லது எதோ கட்டாயத்திற்காக மட்டுமே கட்டுபட்டு செய்யும் போது.. ஒரு நிலையில் அதே தவறு மீண்டும் வீரியமுடனும்.. விடாபிடியாகவும் வந்து சேர வாய்ப்புண்டு..
தானே திருந்தினாலும்…மற்றவருக்காக ஆனாலும்..சரி.. ஆரம்ப நிலையோ..அல்லது தீவிர நிலையோ எதுவாக இருந்தாலும் சரி.. நாமும் முழு மனதோடு ஈடுபடுவதோடு…
அதற்கு பதிலாக வேறு ஒரு நல்ல விஷயத்தை நன்கு யோசித்து கடைபிடிக்க தொடங்கலாம்… புது விஷயத்தில் ஈடுபடுவது நமது முயற்சிக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்றே நம்பலாம்..
நானும்தான் நம்புகிறேன்….