Header Banner Advertisement

 ஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்


Hi-LW0602-36704158-Prestige-Sea-View-Rooms-3

print
உலகில் உள்ள சில ஹோட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு செலவழிக்கும் கட்டணத் தொகையில் நம்மூரில் ஒரு வீடே வாங்கிவிடலாம். நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் காஸ்ட்லி ஹோட்டல்கள் சில இங்கே…

உலகின் முக்கியஸ்தர்கள் எல்லாம் இங்குதான் தங்குகிறார்கள். நீங்களும் ஒரு முக்கியஸ்தர் என்றால் இந்த ஹோட்டல்களில் தங்கலாம்..! மகிழ்ச்சியில் திளைக்கலாம்..!

1.பிரஸிடென்ட் வில்சன் ஹோட்டல்,
ஜெனிவா, ஸ்விட்சர்லாந்த்.
கட்டணம் ரூ.50,22,000.

இந்த ஹோட்டலில் இருக்கும் ‘ராயல் பென்த் ஹவுஸ் சூட்’ தான் உலகிலே மிக அதிகமான கட்டணம். இங்கு ஓர் இரவு தங்குவதற்கு ரூ.50,22,000.

இந்த சூட்டில் தங்கி ஜெனிவா ஏரியின் அழகைப் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். மொத்தம் 12 அறைகள் உள்ளன. அதனுடன் இணைந்த 12 மார்பிள் பாத்ரூம்கள். 103 அங்குல எல்.இ.டி. டி.வி., டால்பி சவுண்ட் சிஸ்டம், பில்லியர்ட்ஸ் விளையாட்டுத் தளம், லைப்பரரி, பார் எல்லாம் இருக்கிறது.

வி.ஐ.பி.க்கள் என்றாலே எதிரிகள் ரவுண்டு கட்டி நிற்பார்கள். அதனால் இந்த ரூம் முழுவதும் குண்டு துளைக்காத புல்லட் ப்ரூப் கொண்டு அமைத்திருக்கிறார்கள். முற்றிலும் பாதுகாப்பான அறை. இந்த அறையில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை தங்கலாம். இங்கிருக்கும் டைனிங் டேபிளில் 26 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.

பெரிய மனுஷங்க மத்தியில இந்த ராயல் பென்த் ஹவுஸ் மிகப்பிரபலம். ரஷ்ய அதிபர் புடினுக்கு பிடித்த அறை இதுதான்.
===

2.ராஜ் பேலஸ்,
ஜெய்ப்பூர், இந்தியா.
கட்டணம் ரூ.48,12,000

இந்தியாவை ஏழை நாடு என்று யார் சொன்னது? கோடீஸ்வரர்கள் வாழும் நாடு என்று சொல்கிறது இந்த ஹோட்டல். இங்கு ஒரு இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.48,12,000.

ராஜாக்கள் ஆண்ட காலமெல்லாம் போய்விட்டது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் பல நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. சில அரண்மனைகள் மட்டும் இன்றைக்கும் பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. 1995 வரை சும்மா கிடந்த ஜெய்ப்பூர் அரண்மனையை அமர்களமான ஹோட்டலாக மாற்றிவிட்டார், மன்னர் பரம்பரையின் தற்போதைய இளவரசி ஜெயேந்தர குமாரி.

இங்கிருக்கும் ‘த பிரஸிடென்சியல் சூட்’தான் ஆசியாவிலேயே பெரிய சூட். 1,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. தனி நீச்சல் குளம், தங்க இழைகளும், தந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிகளும் உள்ளன. இங்கிருந்து பிங்க் சிட்டியான ஜெய்ப்பூர் நகரை முழுவதுமாக பார்க்கலாம்.
===

3. போர் சீஸன்ஸ் ஹோட்டல்,
நியூயார்க், அமெரிக்கா.
கட்டணம் ரூ.35,96,000

இந்த ஹோட்டலில் உள்ள ‘டை வார்னர் பெண்ட் ஹவுஸ் சூட்’டில் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.35,96,000.

நியூயார்க்கில் பெரியதும் உயரமனதுமான ஹோட்டல் இதுதான். மொத்தம் 52 மாடிகள் கொண்டது. ஒவ்வொரு அறையின் சுவரும் தங்கம் மற்றும் பிளாட்டினம் கொண்டு வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த அறையில் இருந்து 360 டிகிரி கோணத்தில் நியூயார்க் நகரை கண்டு ரசிக்கலாம். வாட்டர் பால் விளையாட்டு, லைபரரி, பியூட்டி சலூன், ஸ்பா, பெரிய பியானோ இசைக் கருவியும் இந்த அறைக்கான தனி சிறப்பு.
===

4. ஹோட்டல் மார்டினேஸ்,
கேன்ஸ், பிரான்ஸ்.
கட்டணம் ரூ.23,25,000

சர்வதேச திரைப்பட விழாவை வருடம் தவறாமல் கொண்டாடி குதுகலிக்கும் நகரம் கேன்ஸ். இங்கிருக்கும் மார்டினேஸ் ஹோட்டலில் உள்ள ‘பெண்ட் ஹவுஸ் சூட்’ உலகிலேயே அதிக கட்டணம் கொண்ட அறைகளில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. இந்த அறையில் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.23,25,000.

தனியார் பீச், பியானோ பார், சிட்டி ரூம், டைனிங் ரூம், இரண்டு பெட்ரூம், ஸ்பா பாத் போன்ற பல வசதிகள் இருக்கின்றன. டெரஸில் நின்றபடி கேன்ஸ் வளைகுடாவை பார்த்து ரசிக்கலாம்.
===

5. பாம்ஸ் கேஸினோ ரிஸார்ட்,
லாஸ் வேகாஸ், அமேரிக்கா.
கட்டணம் ரூ.22,00,194.

இந்த ஹோட்டலில் இருக்கும் ‘ஹக் ஹெப்னர் ஸ்கை வில்லா’வில் தங்க கட்டணம் ரூ.22,00,194. மூன்று பெட்ரூமுடன் கூடிய இரண்டு தளங்கள் கொண்ட ரூம். டாப் அப் பிளாஸ்மா டிவி, ஜிம், மசாஜ், பயர் பிளேஸ், போக்கர் டேபிள் என சகலவிதமான சந்தோஷங்களும் இந்த ஹோட்டலில் நிரம்பிருப்பதால், இது பேச்சுலர்களின் சாய்ஸாக இருக்கிறது.

லாஸ் வேகாஸ் என்றாலே சூதாட்ட நகரம்தான். அதன்பின் அங்கு தங்குபவர்களுக்கு எல்லா வசதியும் இல்லாவிட்டால் எப்படி? விலையுயர்ந்த மது வகைகள், அனைத்து நாடுகளின் ‘கால் கேர்ள்ஸ்’

என்று பிரமாண்டமாக இருக்கும். அதனால்தான் இந்த ஹோட்டலை ‘ஒரிஜினல் ப்ளேபாய் மேன்சன்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.