Header Banner Advertisement

கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா?


sea-water

print
கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா? என்றொரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் குடிக்கும் நீரெல்லாம் வியர்வை, சிறுநீர் என வெளியேறிக் கொண்டே இருக்கிறது. அதனால் மேலும் மேலும் நீரைக் குடிக்கிறான். மனிதர்களின் நீர் தேவை பெருகிக் கொண்டே போகின்றன. இப்படியே போனால் ஒரு நாளில் குடிப்பதற்கு நல்ல தண்ணீரே இல்லாத நிலை ஏற்படும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை அப்படி ஏற்பட்டு விட்டால் மனிதன் கடல் நீரை குடித்து உயிர் வாழ முடியுமா? சிருநீரகம்தான் நமது உடலில் நீரை தனியாக பிரித்தெடுக்கிறது. இது சுத்தப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது.

நம் உடலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஏனைய கழிவு உப்புகளையும் வெளியேற்றி சிறுநீர் வழியாக அனுப்புகிறது. சிறுநீர் உப்பு கரித்த சுவையில் இருப்பதற்கு இதுவே காரணம். இந்த உப்புகள் சிறுநீரைவிட கடல்நீரில் அதிக விகிதத்தில் இருப்பதால் தான் கடல் நீரை நம்மால் குடித்து பழகி கொள்ள முடியவில்லை. நம் உடலும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனாலும், ஏ.பாம்பார்ட் என்ற பிரெஞ்ச் விஞ்ஞானி தனந்தனியாக படகில் நடுக்கடலில் நல்ல நீரை எடுத்துக்கொள்ளாமல் கடல் நீரை குடித்தே எந்த நோயும் வராமல் 45 நாட்கள் வரை தாக்குபிடித்தார். அத்தோடு தன் பரிசோதனையை முடித்துக்கொண்டார்.

அப்படியானால் கடல் நீரில் வாழும் மீன் இனங்கள் உப்பு நீரை உட்கொண்டா வாழ்கின்றன என்ற கேள்வி எழுகிறது. மீனின் சிறுநீரகங்கள் மிகமிகச் சிறியவை அதோடு அசுத்தங்களை பிரித்தெடுக்கும் திறனும் அற்றவை. மாறாக மீன்களின் கழுத்து செதில்களில் நீரை சுத்தப்படுத்தும் மிகச் சிறந்த அமைப்பு ஒன்று உள்ளது.

இது மீன்களின் ரத்தத்தில் உள்ள கழிவு உப்புகளை கூட பிரித்து எடுத்து சளி பொருளாக செதில் வழியாக வெளியேற்றி விடுகிறது. மீன்களின் செதில்களில் இத்தகைய சளிப்பொருள் அதிகம் தங்கியிருந்தால் நாம் அந்த மீன்களை உணவுக்காக வாங்குவதில்லை. கழிவுகள் அதிகமாக செதில் பகுதியில் சேர்ந்திருப்பது மீன் இறந்து அதிக நேரம் ஆகிவிட்டதை குறிக்கும்.

சரி, கடல்நீரை குடிக்கலாமா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.