Header Banner Advertisement

கணிதமேதைகளின் சக்கரவர்த்தி


Untitled

print
லுவலக வரவு செலவு கணக்குகளை 12 மணி நேரம் கடின பிரயத்தனங்களோடு பார்த்து முடித்தார் அந்த நடுத்தர வயது மனிதர். விடிய விடிய தூக்கம் இல்லாமல் உழைத்த அந்த மனிதர், குளித்து வர குளியலறை சென்றார். அப்போது வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை 5 நிமிடத்தில் அந்த கணக்கை பார்த்து, அதிலிருந்த தவறுகளை திருத்தியது.

குழந்தையின் இந்த புத்திசாலித்தனத்தை தந்தையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. தனது அனுபவம் அவரது தவறை ஒத்துக்கொள்ள மறுத்தது. அவருக்கோ கடுங்கோபம். “ஒருநாள் முழுக்க ராத்திரி பகல் விழித்திருந்து நான் பார்த்த கணக்கை நீ 5 நிமிடத்தில் சரி செய்து விட்டாயா..?” என்று கேட்டார்.

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
“அதுக்கெல்லாம் குறுக்கு வழி இருக்கப்பா! வேணும்னா, நான் திருத்தியதை நீங்க மறுபடியும் சரிபாருங்க!” என்றது குழந்தை. மீண்டும் அந்த தந்தை மணிக்கணக்காக உட்கார்ந்து கணக்கை சரிப் பார்த்தார். குழந்தை சொன்னதுதான் சரியாக இருந்தது.

இப்படி பெரிய நிறுவனத்தின் கணக்கையே 5 நிமிடத்தில் பார்த்து திருத்திய அந்தக் குழந்தையின் வயது 3 மட்டுமே. பிறவி மேதையான அந்த குழந்தைதான் பின்னாளில் பெரிய பெரிய கணித முறைகளை உருவாக்கி, உலகுக்கு அளித்த கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்.

எண் கணிதம், அறிவியல் ஆய்வுகள், ஜியோமெட்ரி, பூமியின் மேற்பரப்பு, கணக்கியல், வானவியல், காந்தவியல், ஒளியியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்து பிரமிப்பூட்டும் முடிவுகளை கண்டறிந்து உலகுக்கு சொன்ன ஒரு அசாதாரண மனிதர்தான் காஸ்.

நடக்கக்கூட அறியாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது கணித ஞானம் பெரிய மேதைகளையே திக்குமுக்காட செய்தது. கணித உலகில் பல சமன்பாடுகளை உருவாக்கி சிரமமின்றி கணிதத்தை எளிதாக்கியதால் இவரை கணிதமேதைகளின் சக்கரவர்த்தி என்று அழைக்கிறார்கள்.

கி.பி. 1777 ஏப்ரல் 30-ல் பிறந்த காஸ், இளமைப் பருவத்தை அடையும் முன்பே எண் கணிதத்துக்கான முழு அஸ்திவாரத்தை வடிவமைத்து முடித்திருந்தார். இந்த கண்டுபிடிப்பின் ஒரு பகுதிதான் வட்டச்சுற்று. இதற்கு கடிகார நேரக் கணக்கீட்டினையே உதாரணமாக சொல்லலாம்.

ஒருநாள் என்பது 24 மணி நேரம், 00 முதல் 23 வரை கொண்டது. 00 என்பது நடுஇரவு. இம்முறையில் 19 என்பது மாலை 7 மணியை குறிக்கும். ஆனால், இதனை கடந்து 8 மணி நேரம் கழித்து மணி என்னவாக இருக்கும்? என்று கேட்டால் 19 + 8 = 27 என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 00 முதல் 23 வரையான வட்டச்சுற்று உடைந்து முடிவது 23-ல். ஆக 19-க்கு பிறகு 8 மணி நேரம் கடந்தால் வருவது அதிகாலை 3 மணி என கணக்கிட வேண்டும். இப்படி வட்டச்சுற்றை கணித்தவர் காஸ்தான். வட்டத்திற்கு 360 டிகிரி என்ற கணக்கை வகுத்தவரும் இவர்தான்.

1801-ல் கணித முறையினை ஆழமாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் காஸ். பாளினாமியல் சமன்பாடுகளுக்கு பல முறையில் விடை அடையாளம் என்ற கட்டுரையை பற்பல உதாரணங்களுடன் சமன்பாடுகளை எழுதினார். அந்த புத்தகத்தை படித்து கணித உலகமே வாயப்பிளந்து நின்றது. ஒவ்வொரு முடிவும் ஆதாரமானவை.

எப்படி இவருக்குள் தினம் தினம் இப்படி கணித வழிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என வியந்து போய் நின்றது உலகம். 1809-ல் vஎன்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இதுதான் இன்று நாம் விண்ணில் செலுத்தும் செயற்கை கோள்களுக்கு அடிப்படை ஆதாரம். இதன் மூலம் தான் செல்போன் இயக்கத்துக்கும் வழிகள் பிறந்தன.

மனித சக்தியால் ஆகாது என்று சொல்லும் அளவுக்கு ஆழமான கணித திறமைக் கொண்டிருந்த காஸ். தனிஒரு மனிதனாக ரகசியமாக செய்தார். தனக்கென ஒரு சிஷ்யனை உருவாக்கிக்கொள்ளமால் விட்டுவிட்டார். அப்படி ஒருவரை உருவாக்கி இருந்தால் கணிதத்துறை இன்னும் பிரமாண்டமான பல முடிவுகளை கண்டறிந்திருக்கும். என்ன செய்ய நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!