
கறிவேப்பிலையில் அதிக சத்துகள் நிறைந்து இருப்பதால் அ தை நாம் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலத்திலிருந்தே நம் நாட்டில் பழக்கத்தில் உள்ளது.
கறிவேப்பிலையில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துகளான விட்டமின்கள் A, B, B2, C, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துகள் இருப்பது தெரியாமல் சிலபேர்கள் சாப்பிடும் போது கறிவேப்பிலையை தூக்கி எரிந்து விடுகிறார்கள்.
நம் உடம்பில் உண்டாகும் பலவகையான பிரச்சனைகளை குணமாக்குவதற்கு கறிவேப்பிலையை எப்படியெல்லம் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்!
கறிவேப்பிலையை உலர வைத்து, பின் அதை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், நாள்பட்ட ரத்தசோகை விரைவில் குணமடையும்.
முதுமையில் உண்டாகும் கண்புரை நோய்களுக்கு, கறிவேப்பிலையின் சாறு எடுத்து அதை தினமும் குடித்து வந்தால், கண்புரை மற்றும் கண்கள் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகிவிடும்.
கறிவேப்பிலையை வெயிலில் உலர்த்தி அதை பொடி செய்து, பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து, ஒரு நாளைக்கு 3 முறைகள் சாப்பிட்டு வந்தால், பல நாட்கள் அவஸ்த்தை படும் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் 20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து அதன் சாறு எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகினால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.
காலையில் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைவதுடன், நீரிழிவு நோயும் தடுக்கப்படும்.
சிறுநீரக தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், ஏலக்காயை பொடி செய்து, கறிவேப்பிலை ஜூஸ் உடன் கலந்து, குடித்து வர வேண்டும். இதனால் சிறுநீரம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.
பூச்சிகடியை குணமாக்க கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.
கறிவேப்பிலையை அரைத்து அதை மோரில் பேஸ்ட் போல செய்து, அதனுடன் சீரகப்பொடி, ப்ளாக் சால்ட் ஆகியவற்றை சேர்த்து கலந்து பருகி வந்தால், நீங்கள் உட்கொள்ளும் உணவில் பசியின்மை மற்றும் சுவையின்மை பிரச்சனைகள் தீர்க்கப்படும்.