Header Banner Advertisement

கறி மசாலாப் பொடி(கள்) தயாரிக்கும் முறை


001

print

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 10 அல்லது 12
மல்லி விதை – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பெருங்காயம் – 1 துண்டு

செய்முறை:

மேலே சொல்லியிருப்பவற்றை தனித் தனியாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் மெல்லிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை கத்திரிக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய் மாதிரி நாட்டுக் காய்களுக்கு இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.

=======================================================

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 15
மல்லி விதை – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு

செய்முறை:

மேலே சொல்லியிருக்கும் சாமான்களை வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியை எல்லாக் காய்கறிகளுக்கும் இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.

=======================================================

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 10
மல்லி விதை – 200 கிராம்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
லவங்கப் பட்டை – 1 (பெரியது)
கசகசா – 2 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
வால் மிளகு – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 4
விரளி மஞ்சள் – 3

செய்முறை:

இவைகளை தனித் தனியாக வாணலியில் வறுத்துக் கொண்டோ, நல்ல வெயிலாக இருந்தால் காய வைத்தோ எடுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளலாம்.

காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு மற்ற சாமான்களை மட்டும் அரைத்துக் கொண்டு, காரத்தை அன்றாடம் தனியாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த முறையில் பொடியை ருசிக்கேற்றவாறு அவரவர் கூட அல்லது குறைய, போட்டுக் கொண்டு, தேவையான அளவு காரத்தை மட்டும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.

இதனால் இந்த மசாலா அதிகம் வேண்டாதவர்கள், காரத்திற்காக மட்டும் இதை அதிகம் சேர்க்கத் தேவை இல்லை. அல்லது அதிகம் மசாலா தேவை இருப்பவர்கள், காரம் அதிகமாகிக் கஷ்டப்பட வேண்டாம்.