
கேரளாவில் 1957 ஆம் ஆண்டு அமைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிதான், முதல் எதிர்க்கட்சி அமைச்சரவை என்று சுதந்திர இந்தியாவில் கூறப்படுகிறது. இங்கு, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதலமைச்சராக இருந்தார். பிற்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரே. இந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகளே நீடித்தது. ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் குழப்பம் எழுந்தது.
![]() |
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு |
இதற்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருந்ததாகச் சொல்வார்கள். இதனால், கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வந்தது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை 356 ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்திக் கலைக்கும் காரியம் முதன்முதலாக அரங்கேறியதும் அப்போதுதான். இதைத்தான், ‘வில்லன் வெற்றி பெற்றுவிட்டான்’ என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதினார். அதற்குப் பிறகும், வில்லன் வெற்றி எத்தனையோ முறை வெற்றி பெற்று இருக்கிறான்.!