Header Banner Advertisement

கெட்டப் பெண்ணிடமும்… நல்லப் பெண்ணிடமும்…?


www.villangaseithi.com

print
 பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு 3 நாள் ஓய்வு கொடுத்து, தானும் 3 நாள் பட்டியினிருப்பாள் – சுவிட்சர்லாந்து.
 இந்த உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநிறுத்தும் கடமை ஆண், பெண் இருவருக்கும் இருக்கிறது. அது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. லிலியன் வால்ட் (எழுத்தாளர்).
 பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்களா என்று எனக்குத் தெரியாது;  ஆனால் கண்டிப்பாகத் தாழ்ந்தவர்கள் அல்ல – கோல்டர் மேயர் (முன்னாள் இஸ்ரேல் அதிபர்).
 அத்திப் பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணின் மனதிலுள்ளதைப் பார்க்கவே முடியாது – இந்தியா.
 பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இல்லாதவரை அவர்களுக்கு இந்த சமூகத்தில் சம உரிமை கிடைக்காது – எலிசபெத் ஸ்டாண்டன்.
 பாதிரிமார்களுக்கும், பெண்களுக்கும் மறதி என்பது கிடையாது – ஜெர்மனி.
 பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ, அந்த ஆண்கள், அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகிவிடுவர் – ரவீந்திரநாத் தாகூர்.
 பெண்ணியம் என்பது வேறொன்றுமில்லை.பெண்களையும் மனிதர்களாகப் பார்ப்பதுதான் – பௌலர் த்ரேச்சர் (பெண்ணியவாதி).
 எல்லா ஆண்களும் சுதந்திரத்தோடு பிறந்தவர்களாம்;  அது எப்படி பெண்கள் மட்டும் அடிமைகளாகவே பிறந்தார்கள்? – மேரி ஆஸ்டல் (இங்கிலாந்து எழுத்தாளர்).
 கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல். நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு – போலந்து.
 சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். ஆண்களோ பெண்களோ எந்த வேறு பாடுமின்றி நடத்தப்பட வேண்டும் – ஒலிம்பி டி களக்ஸ் (பிரெஞ்சு நாடக ஆசிரியர்).
 எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை பிரெஞ்சு.
 பெண்ணுரிமை என்பது வேறொன்றுமில்லை. மனித உரிமைதான் – மஹ்னாஸ் ஆஃப்கமி (இராணிய பெண்ணுரிமைப் போராளி).
 சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் – காந்தியடிகள்.
 எந்த நாடாக இருந்தாலும் பெண்கள் சமத்துவம் என்பது முன்னேற்றத்தின் முதல் படி – கோஃபி அன்னான் (ஐ.நா.சபையின் முன்னாள் தலைவர்).
 பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் சமூகம் முன்னேறும். வருங்காலத் தலைமுறை வாழ்வில் உயரும் – கோஃபி அன்னான்.
 ஒருவரது தகுதியை முடிவு செய்வது திறமைதான். மரபணு தரும் பாலின வேறுபாடு அல்ல – பெல்லா  அப்சக் (அமெரிக்க வழக்கறிஞர்).
 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் – பாரதியார்.