
புகழ்பெற்ற பலரையும் உலகிற்கு வழங்கிய மாபெரும் குருகுலம் கேம்பிரிட்ஜ். மனித இனத்தின் பரிணாம தத்துவத்தை சொன்ன டார்வின் முதல் நியூட்டன் வரை பல விஞ்ஞானிகள் படித்த இடம்.
வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் போன்ற கவிஞர்களை உலகுக்கு அளித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தனது 800-வது ஆண்டு விழாவை 2009-ம் ஆண்டு முழுவதும் கொண்டாடியது. நமது நாட்டிலும் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பிரபலங்கள் பலரும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் மாணவர்களே.
புகழ் பெற்ற இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் கேம்பிரிட்ஜ் மாணவர். ராமானுஜத்தின் திறமையை அறிந்து அங்கு அழைத்தவர் ஜி.ஹெச்.ஹார்டி என்பவர், 1913 முதல் 1918 வரை டிரினிட்டி கல்லூரியில் படித்தார்.
‘ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி’ என்ற விருது பெற்ற இரண்டாம் இந்தியர் ராமானுஜன்தான். ஹரிவம்சராய் பச்சன் என்பவரும் கேம்பிரிட்ஜ் மாணவர்தான். இந்திய திரையுலகின் சகாப்தம் என்று சொல்லப்படும், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் தந்தை இவர். கவிஞரான இவர் ஆங்கில இலக்கியத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்தியர்.
![]() |
ஹரிவம்சராய் பச்சன் |
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான டிரினிட்டி கல்லூரியிலும் இந்தியர்கள் படித்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பிரதமாரான ஜவஹர்லால் நேரு 1907 முதல் 1910 வரை இங்கு படித்தார். ராஜீவ்காந்தி 1970-களில் டிரினிட்டி கல்லூரியில் தான் படித்தார். இந்த கல்லூரியில் படிக்கும்போதுதான் உணவுவிடுதி ஒன்றில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை சந்தித்து, காதல் வயப்பட்டு பின்னர் திருமணமும் செய்து கொண்டது எல்லாமே உலகம் அறிந்த தனிக்கதை.
இந்திய கிரிக்கெட்டின் தந்தையாக கருதப்படும் ரஞ்சித் சிங்ஜி 1888 முதல் 1891 வரை கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியில் படித்தவர். டாட்டா குழுமத்தின் நிறுவனரான சர் தொரோப்ஜி டாட்டா, இந்திய தொழில் நுட்ப துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர், 1877 முதல் 1879 வரை இங்கு படித்தவர். இந்தியாவுக்கு நோபல் பரிசு பெற்று தந்த பொருளாதார நிபுணர் அமர்தய சென் 1957 முதல் 1963 வரை டிரினிட்டி கல்லூரியில் பயின்றார்.
மற்றொரு பொருளாதார மேதையும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜில் படித்தவர்தான்.