
சார்லஸ் டார்வின் (1809-1882) ஒரு ஆங்கில இயற்கை விஞ்ஞானி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். உயிரின உலகின் பரிணாம வளர்ச்சி பற்றி அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார். இன்றைய உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைத் தத்துவமே டார்வினியமாகும். சிறு வயதிலேயே மிகவும் பொறுமையானவராக சார்லஸ் டார்வின் இருந்தார்.
வயது முதிர்ந்த பிறகும் இந்தக் குணம் அவரிடம் அப்படியே இருந்தது. டார்வினின் கொள்கைகளைத் தாக்கி நாளும் பல கடிதங்கள் வரும். பத்திரிகைகளில் பல கேலிச் சித்திரங்களும் வெளிவந்தன. ஒரு சமயம் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற அவருடைய சித்தாந்தத்தைத் தாக்கி பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம் வெளியானது. அதில் குரங்கின் உடலும் டார்வினின் தலையும் கொண்ட உருவம் வரையப்பட்டிருந்தது.
ஒரு நண்பர், அதை எடுத்து வந்து டார்வினிடம் காட்டினார். டார்வின் அதைப் பார்த்து சிரித்துவிட்டு, “தலை நன்றாக வரையப்பட்டிருக்கிறது. ஆனால் உடல்தான் சரியில்லை.! மார்பு அகலமாக உள்ளது. உண்மையில் அப்படி இருக்காது.!” என்று நிதானமாக கூறினார். தன்னைத் தாக்குபவர்கள் மீதுகூட சார்லஸ் டார்வின் கோபம் கொண்டது கிடையாது.! ஆனால், நம் அரசியல் தலைவர்கள் அப்படியா? கொஞ்சம் பொறுமை வேணும்யா…!
கருத்துரை: சி.ஹேமகாவியா,
இமாகுலேட் பள்ளி, புதுச்சேரி.