Header Banner Advertisement

சகோதர பாசத்தின் வெளிப்பாடு ‘ரக்க்ஷாபந்தன்’.!


www.villangaseithi.com

print
சகோதர, சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் ‘ரக்க்ஷாபந்தன்’ விழா இன்று (ஆகஸ்ட்-1) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சகோதரர்களாக பாவிக்கும் ஆண்களின் கையில் ராக்கி கயிற்றை கட்டி ஆசி பெறுவது இவ்விழாவின் சிற்பம்சம். பாசமுள்ள தங்கைக்கு பரிசுகளை அளிப்பதும், அன்பு செலுத்தும் அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி ஆசி பெறுவதால் பாசத்தின் எல்லை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. புராண கதைகளிலும் அண்ணன் – தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக மகாபாரத கதை விளங்குகிறது.
ஒரு சமயம் கிருஷ்ணனின் விரலில் காயம் காரணமாக ரத்தம் சொட்டியது. இதைப் பார்த்து திரவுபதி அதிர்ச்சியடைந்தார். உடனே பதறியடித்தப்படி, தான் அணிந்திருந்த புடவையை கிழித்து கிருஷ்ணனின் காயத்துக்கு கட்டுப்போட்டார். திரவுபதியின் பாசத்தில் நெகிழ்ந்த கிருஷ்ணன், ‘எதிர்காலத்தில் என்னுடைய உதவி உனக்கு எப்போது தேவைப்பாட்டாலும் ஓடோடி வருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படியே, துச்சாதனன் திரவுபதியின் துகிலுரித்தபோது கிருஷ்ணன் காப்பாற்றினார். திரவுபதி, கிருஷ்ணனின் காயத்துக்கு புடவையால் கட்டுபோட்ட நிகழ்வே இன்று ராக்கி கயிறாக கையில் கட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
ஒரு சமயம் மகாபலி சக்கரவர்த்தி ‘தன்னுடைய பிரதேசங்களை மகா பிரபுவாகிய தாங்கள் பாதுகாக்க வேண்டும்’ என்று விஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற விஷ்ணுவும், வைகுண்டத்தில் இருந்து கிளம்பி மகாபலி சக்கரவர்த்தியின் தேசங்களை காக்க சென்றார். விஷ்ணு இருக்கும் இடத்தில் தானும் இருக்க வேண்டும் என்று விரும்பிய மகாலட்சுமியும் வைகுண்டத்தை விட்டு வெளியேறி அந்தணர் பெண்ணாக மகாபலி சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தார்.

சிரவண பவுர்ணமி தினத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் கையில் லட்சுமிதேவி ராக்கி கயிறு கட்டினார். அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக அன்று முதல் ‘ரக்க்ஷாபந்தன்’ கொண்டாடப்படுவதாகவும் வரலாற்று சுவடுகளில் கூறப்படுகிறது.