Header Banner Advertisement

சாதனைக்கு ஒரு புத்தகம்


www.villangaseithi.com

print

நாள்தோறும் உலகில் பலர் சாதனை புரிகிறார்கள். அந்த சாதனைகள் வெறும் வார்த்தைகளுடன் மட்டும் நின்று போகாமல் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் படி உருவாக்க நினைத்தார்கள். அந்த புத்தகம்தான் கின்னஸ்.

அயர்லாந்தை நாட்டை சேர்ந்த சர்க்யூபீவர் என்பவர்தான் கின்னஸ் புத்தகத்தை உருவாக்கினார். சாதனைகள் அத்தனையையும் கொண்ட இந்த புத்தகத்தை தன் ஒருவனால் எழுத முடியாது என்று உணர்ந்தார். அதற்காக லண்டன் சென்றார்.

 

பிரிட்டன் அரசாங்கத்திற்கு புள்ளி விவரங்களை சேகரிக்கும் நோரிஸ் மைக் வைகட்டர் மற்றும் ரோஸ்மைக் வைகட்டர் என்ற இரட்டையர்களை சந்தித்து தனது யோசனையை சர்க்யூபீவர் தெரிவித்தார். அவர்களும் முழு மனதுடன் ஒத்துழைப்பு தர முன்வந்தார்கள். 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் வெளிவந்தது. 198 பக்கங்களைக் கொண்டதாக அது இருந்தது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் வெளிவருகிறது.
இடையில் 1957 மற்றும் 1959 ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்த புத்தகம் வெளிவரவில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. முன்பெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே கின்னஸ் புத்தகம் வெளிவந்தது. இப்போது 40க்கும் மேற்பட்ட மொழிகளில் ‘கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ வந்து கொண்டிருக்கிறது. இதில் இடம்பிடிக்கத்தான் எத்தனை எத்தனை விதமான போட்டிகள்.! புத்தகத்தை ஒரு முறை வாங்கிப் படித்து பாருங்கள் மலைத்துப் போய்விடுவீர்கள்.