14. திரிவேணி சங்கமம்
இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களும் ஒன்றாய் சங்கமிக்கும் இடம் இது. இங்கு நீராடுவது புண்ணியம் என்பதால் நீராடும் சுற்றுலா பயணிகள்.
15. காமராஜர் மணி மண்டபம்
காந்தி மண்டபத்திற்கு அருகே காமராஜர் மணிமண்டபம் உள்ளது. இதுவும் காந்தியைப் போலவே காமராஜரின் அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடம். காமராஜரின் அரிய புகைப்படங்கள் இங்கு உள்ளன.
சூரிய உதயத்தை ரசனையோடு பார்ப்பதற்காக உருவாக்கிய இடம் இது.
கன்னியாகுமரியில் கடல் சார்ந்த கைவினைப் பொருட்கள் விற்பனை படுஜோராக இருக்கும். கலைநயம் மிக்க இந்தப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்.
கடல் அழகைக் கரையில் அமர்ந்து கண்டு ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட பூங்கா.
அரசு அருங்காட்சியகத்தின் முன்தோற்றம்.
16. குருநாதசுவாமி கோயில்
இந்த சிறிய கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜராஜசோழன் கட்டியது என்றால் நம்ப கடினமாகத்தான் இருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் என்ற பிரமாண்டத்தைக் கொடுத்த அந்த ராஜராஜனான இந்த சிறிய கோயிலை கட்டியது என்று. சோழர்களின் கட்டடக்கலையில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில் கி.பி.1038-க்கு முன்பு கட்டப்பட்டதாக இங்குள்ள 16 கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையம் அருகில் இந்தக் கோயிலைக் காணலாம்.
17. சுவாமி விவேகானந்தர் பாறை
18. திருவள்ளுவர் சிலை
19. படகுத் துறை
கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் விவேகானந்தர் பாறை உள்ளது. அந்த பாறைக்கு எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை என்ற இரண்டு படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
புறப்படத் தயாராய் பொதிகை.
படகினுள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்.
படகு வழியாக திருவள்ளுவர் சிலை.
விவேகானந்தர் பாறையில் படகு. இறங்கும் பயணிகள்.
விவேகானந்தர் மண்டபத்தை நோக்கி..
பளிங்கு யானைகளுடன் ஒரு போட்டோ
மண்டபத்தின் முன்தோற்றம்
பக்கவாட்டுத் தோற்றம்
மண்டபத்தை கேமராவுக்குள் அடக்க முயலும் இளஞ்ஜோடி
திருவள்ளுவரை பின்புறம் பார்ப்பது அபூர்வம்தான்
காதலர்களுக்கும் இந்த இடம் சொர்கம்தான். எப்படி போஸ் கொடுக்கிறார்கள் பாருங்கள்!
ஸ்ரீபாத மண்டபம்
ஸ்ரீபாத மண்டபமும் விவேகானந்தர் மண்டபமும்
20. திருவள்ளுவரின் முழுத்தோற்றம்
திருக்குறள் தந்த தெய்வ புலவர் திருவள்ளுவர் சிலை. 133 அதிகாரங்களில் திருக்குறள் அமைந்திருப்பதை நினைவு கூறும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை உயரம் 95 அடி. அலங்கார மண்டபம் அதாவது பீடம் 38 அடி உயரம். மொத்தம் 133 அடி.
திருவள்ளுவர் சிலை 1283 சிறிய மற்றும் பெரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்த எடை 7,000 டன். முகத்தின் உயரம் மட்டும் 10 அடி. தோள்பட்டை அகலம் 30 அடி.
சிலை மட்டும் 2000 டன் எடைக் கொண்டது. திருவள்ளுவரின் காலடியில் நின்று கடலைக் கண்டுகளிப்பது தனி சுகம்.
திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகனந்தர் பாறையைப் பார்ப்பது தனியழகு.
22. அலையும் துறவி கண்காட்சி
விவேகானந்தர் உலகம் முழுவதும் அலைந்து ஆன்மிகப் பணியாற்றிய நிகழ்வுகளை அற்புதமாக சொல்கிறது இந்த அலையும் துறவி கண்காட்சி. இந்தக் கட்டடம் ஆன்மிக வடிவமைப்பில் மேரு கலையை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
23. வேக்ஸ் மியூசியம்
இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் வேக்ஸ் மியூசியம் இதுதான். இங்கு தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளவது வித்தியாசமான அனுபவம்.
ஜெயலலிதா மெழுகுச்சிலையாக
24. இயந்திரத்துடன் கிரிக்கெட்
வேக்ஸ் மியூசியத்தில் பவுலிங் இயந்திரம் போடும் பந்துகளுக்கு கிரிக்கெட் விளையாடி மகிழலாம்.
24. குமரி வரலாற்றுக் கூடம்
கன்னியாகுமரி ரயில்நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக் கூடம். இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள், உலகத்தின் தோற்றம், அன்னை தேவி குமரியின் அவதாரம், விவேகானந்தரின் வரலாறு, அய்யா வைகுண்டரின் வரலாறு, புனித தாமஸ், மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாகவும் சிற்பங்களாகவும் வைக்கப்பட்டுள்ளன.
25. கலங்கரை விளக்கம்
பழமையான இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலாவாசிகள் பார்வையிடலாம். தினமும் மாலை 3 முதல் 5 மணி வரை அனுமதிக்கிறார்கள். அதற்கு கட்டணமும் உண்டு.
26. விவேகானந்தபுரம்
விவேகானந்த கேந்த்ராவின் தலைமையிடம் இது. கன்னியாகுமரி நகரின் நுழைவிடத்தில் அமைந்திருக்கிறது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இடம் யோகா, தியானம், ஆன்மிகம், தேசிய ஒருமைப்பாடு போன்ற முகாம்களுக்கு பெயர்பெற்றது.
27. ஏக்நாத் ராணாடே சமாதி
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் ஒரு தியான மண்டபத்தை அமைக்க வேண்டும் என்று முயற்சித்து, அந்த முயற்சியை செயல்படுத்தியவர் ஏக்நாத் ராணாடே. அவரின் சமாதி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ளது.
முகாமில் பங்குபெறுபவர்கள் தங்கும் இடம்.
27. சன்செட் பாயிண்ட்
சூரியன் அஸ்தமனமாவதை இங்கிருந்து கண்டு களிக்கலாம். அதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த இடம்.
குடும்பத்துடன் சுற்றி வர கன்னியாகுமரி ஏற்ற இடம். இரண்டு நாட்கள் திட்டமிட்டால் எல்லா இடங்களையும் தவறாமல் பார்த்துவிடலாம்.