
எப்படி வாழவேண்டும்..எப்படி வாழகூடாது…எது அவசியமானது.. எது அவசியமற்றது என்பதையெல்லாம் அவரவர் பெற்றுள்ள அறிவுக்கு தக்க அறிந்தே வைத்திருக்கின்றார்கள்…
அதனை பயன்படுத்துவதில் மட்டும்தான் வித்தியாசபட்டு.. அருமையான வாழ்க்கையோ…மன உளைச்சளோ பெறுகின்றோம்
பெரும்பாலும் தவறுகள்..குற்றங்கள் தெரிந்தேதான் செய்யபடுகின்றது…. அறியாமல் நிகழ்ந்தவைகள் உடனடியாக மாற்றிகொள்ளபட்டுவிடுகின்றது..அல்லது பரிகாரம் தேடப்படுகின்றது… திருத்திகொள்ளபடுகின்றது..
அறிந்தே புரிந்த குற்றங்கள்தான் ஒரு கட்டத்தில் மனஉளைச்சலின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றது
துரோகம்..பொறாமை..வெறுப்பு.. பழிவாங்கும் உணர்வு போன்றவை நம்மையே சிறுக சிறுக கொல்லும் சக்திவாய்ந்த விஷம்…
யாராவது விஷத்தை விரும்பி அருந்துவோமா… விஷம் என்று எழுதியவைகள்..நேரடியாக உடனடியாக உயிரை கொல்பவை மட்டும விஷமல்ல…. இதுகூட ஒரு வகையில் மறைமுகமான விஷமே… சிறுக சிறுக நம்மை சித்ரவதைபடுத்தி கொல்லகூடியது
இந்த விஷமானது நமது ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் முதலில் ஒரு சேர அழிக்கும்.. பின்னர் சுற்றத்தையும் மற்றவர்களையும் விலக்கும்…பின்னர் முழுவதுமாக கொன்றேவிடும்…
தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்கள் மட்டும அதுவும் உடனடியாக போகாமல் சிறுக சிறுக நன்றாக சித்ரவதைபட்டு போகவேண்டும் என்று மிக விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்த மாதிரியான வாய்ப்பை அழகாக பயன்படுத்திகொண்டு பயன்பெறுவோம்…