
print
கம்யூனிசம் என்றாலே எல்லோருக்கும் சிவப்பு நிறம்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் கம்யூனிசம் உருவான நாடான ரஷ்யாவில் ஒரு காட்டின் நிறமே சிவப்பு என்றால் நம்ப முடிகிறது? உண்மைதான். ‘வேர்ம்-உட் பாரஸ்ட்’ என்று பெயர்கொண்ட இந்த காடுதான் இப்போது ‘ரெஸ்ட்’ என்று அழைக்கபடுகிறது.
ஆனால் கம்யூனிசம் உருவான நாடான ரஷ்யாவில் ஒரு காட்டின் நிறமே சிவப்பு என்றால் நம்ப முடிகிறது? உண்மைதான். ‘வேர்ம்-உட் பாரஸ்ட்’ என்று பெயர்கொண்ட இந்த காடுதான் இப்போது ‘ரெஸ்ட்’ என்று அழைக்கபடுகிறது.
1986-ம் வருடத்திற்கு பின்னர்தான் இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டது. இப்படி காடு நிறம் மாறி போனதற்கு அணுக்கதிர்கள்தான் காரணம். சோவியத் ரஷ்யாவின் உக்ரைன் மாகாணத்தில் உள்ள செர்னோபில் அணு மின்நிலையத்தில் உள்ள ஒரு அணு உலை 1986 ஏப்ரல் மாதத்தில் வெடித்து சிதறியது. அந்த கதிர்வீச்சு பாதிப்பால் 56 பேர் உடனடியாக இறந்துபோனார்கள். 8 லட்சம் பேர் கடுமையான கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளானார்கள். எஞ்சிய மக்களை ரஷ்ய அரசு உடனடியாக வெளியேற்றியது.
ஆனால், காடுகளை என்ன செய்ய முடியும்? மரங்களை நகர்த்த முடியாதே. அணு உலையை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவு வரை காடுகள் செழித்து வளர்ந்து இருந்தன. அந்த காடுகளில் ஏகப்பட்ட பனை மரங்கள் இருந்தன. அத்தனையும் கதிர்வீச்சு தாக்கத்தால் பட்டுபோய்விட்டன. இப்போது அந்த காட்டில் முன் எப்போதும் பார்த்திராத வகையில் வழக்கத்தைவிட பெரிய மரங்களும் வளைந்த கிளைகளை உடைய மரங்களும் முளைக்கின்றன. விலங்குகள் ஊனமாக பிறக்கின்றன.
அழகான வண்ணப்பறவைகளின் சிறகுகளில் இப்போது வண்ணங்களே இல்லை. மனிதர்கள் செய்த தவறுக்காக ஒரு காட்டின் மரங்களும் அதில் வாழும் அப்பாவி விலங்குகளும் ஊனமாக அலைந்து கொண்டிருக்கின்றன.
அணுக்கதிர்களால் பல நன்மைகள் இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு விபத்து என்றால் அது சுற்றுச்சூழலையே மாற்றிவிடுகிறது. அதற்கு ஏற்ப பாதுகாப்பான முறைகளை மனிதன் முழுமையாக செய்தபின் இதுபோன்ற அணு உலைகளை தொடங்குவது நல்லது. இல்லையென்றால் விலைமதிக்க முடியாத உயிர்களை வீணாக உயிர் இழக்க நேரிட்டு விடும்.