Header Banner Advertisement

சுயநல முடிவின் விளைவு


www.villangaseithi.com

print

நாம் ஒன்றைபற்றி ஒன்று யோசித்து வைத்திருப்போம்… ஒரு முடிவை பற்றி தீர்மானம் செய்து வைத்திருப்போம்… நமது விருப்பமும்…எண்ணங்களும் ஒன்றாக இருக்கும்…நமக்கு பிடித்த..பிடிக்காத விஷயங்களென்று சிலது இருக்கும்…

இருந்துவிட்டு போகலாமே..அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை… அதே சமயம்..நம்மை சுற்றி உள்ளவர்களும்.. சம்மந்தபட்டவர்களும்..அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அவருடைய விருப்பங்களும் அப்படியே இருக்கவேண்டும்….

நம்முடைய ஜெராக்ஸ் காபி போல் மற்றவர்களும் இருக்கவேண்டும்… அது யாராக இருந்தாலும் சரி மனைவி மக்களோ.. கனவனோ.. குழந்தைகளோ.. உறவுகளோ யாராக இருந்தாலும்…

நாம் சொல்வதை அப்படியே அங்கீகரித்துக்கொள்ளவேண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உள் மனதில் பிடிவாதமாக இருப்பதுதான் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடுகின்றது…

அது நம் எண்ணபடி இல்லாதபோது ஏற்படுகின்ற கோப உணர்ச்சி சாதாரணமாக முடிவதல்ல…உடல்நிலையில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்….உடல் இறுகும்..நரம்புகள் புடைக்கும்… இருதய துடிப்பு அதிகமாகும்..மூச்சுவிடுதல் அதிகரிக்கும்..

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ..கொலண்ட்ரால் அதிகரிக்கும்.. இரத்த அழுத்தம் அதிகரிக்கும்…. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று சற்று நேரம் சென்று ஆரஅமர சிந்தித்து பாருங்களேன் தெரியும்… சில அற்ப காரணங்களோ..தமது வேண்டாத தற்பெறுமையோ ஈகோவோதான் காரணமாக இருக்கும்….

சில சமயங்களில் தம்முடைய கருத்து சரியில்லாததாக கூட இருக்கலாம்..சில சமயம் சரியானதாகவே இருந்தாலும்கூட.. ஆத்திரத்தின் மூலம் சாதித்துவிடுவது சாத்தியமல்ல… ஆரோக்கிய குறைபாடுகளை வேண்டுமானால் சாதிக்கலாம்…

கருத்து பரிமாறல்களை சரிவர கடைபிடித்தோமானால் போதுமே..வெரி சிம்பிள்…எந்த வகையான பாதிப்புகளையும் வராமலே தடுத்துவிடலாம்…

எப்பொழுதும் தம்மை சுற்றி கோட்டைகட்டிகொண்டு… எப்பொழுதும் மூடிய மனதுடன் மாற்று கருத்துகளை ஏற்க மறுத்து…இது பிடிக்கும்..இது பிடிக்காது என சுயநலமாக முடிவெடுப்பதினால் சாதிக்கபோவது நன்மையல்ல…நமக்கு நாமே வைத்துகொள்ளும் ஆப்புதான்…

நமக்கு உள்ளதுபோலவே நான்..எனது… பிடித்தது..பிடிக்காதது என்ற எல்லா கருத்துக்களுமே சுற்றியுள்ளவர்களுக்கும் சேர்ந்தவர்களுக்கும் உண்டு என்பதை எப்பொழுதுமே மறந்தேயிருந்தால் எப்படி.. கொஞ்சம் ஞாபத்தில் வைக்கதான் முயற்சிப்போமே….