Header Banner Advertisement

 சுற்றுலா செலவை இப்படியும் குறைக்கலாம்


Dubai_beach_family_2196506b

print
சுற்றுலா தற்போது மிக எளிமையானதாகவும் அத்தியவசியமனதகவும் மாறிவிட்டது. அதில் நம் மனநிலையை பொறுத்து செலவழிப்பதும் உண்டு.ஆனாலும், பயணத்தின் இடையே சிறு சிறு செலவுகள் ஒன்று சேர்ந்து நம்மை பல இடையுறுகளில் சிக்க வைக்கும். இத்தகைய செலவுகளை சமாளிப்பதற்கு முன் கூட்டியே சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

சுற்றுலா செல்லும் முன் நாம் எடுத்து செல்ல வேண்டியவற்றை பட்டியல் இட வேண்டும். அதன் மூலம் கடைசி நேர அரிபரியை தவிர்க்கலாம். சப்பட்டு விஷயத்தில் அந்தந்த உள்ளூர் உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், நாம் தங்கிருக்கும் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவதற்கு பதிலாக வெளி உணவகங்களில் சாப்பிடுவதன் மூலமும் பணத்தை கணிசமாக மிச்சப்படுத்தலாம். அந்தந்த ஊர் உணவினை சாப்பிடுவது பயணத்தின் தனி ருசியை கூட்டும்.

சுற்றுலா தலங்களுக்கு ஆப்-சீஸனில் செல்வதன் மூலம் பணத்தை இரண்டு மடங்கு சேமிக்கலாம். சீஸன் டைமில் எல்லாம் யானை விலை, குதிரை விலை தான்…!

மேலும் அங்கிருக்கும் கூட்டத்திலிருந்தும் விடுபட முடியும். இந்நாட்களில் விமானங்கள் மற்றும் விடுதிகள் வசூலிக்கும் கட்டண கொள்ளையிலிருந்தும் தப்பிக்கலாம்.

இணையம் வழியே விமான சேவை நிறுவனத்தின் இணையதளத்தில் அல்லாமல் இதுபோன்ற சேவைகளை தொகுத்து வழங்கும் நிறுவனங்களில் விமான பயணச்சிட்டுக்களை பதிவு செய்தல் நமக்கு குறைவான செலவே ஆகும்.

குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது பதிவு செய்ய வேண்டும். நேரம் குறையக் குறைய கட்டணம் அதிகரிக்கும். இரவு அல்லது பின்னிரவு விமானங்களை தேர்ந்தெடுப்பதை விட பகல் நேர விமானங்களில் பயணம் செய்வது செலவை குறைக்க மட்டுமல்ல, மேகத்தினூடே பயணம் செய்வதையும் ரசிக்க முடியும்.

அது மட்டுல்லாமல் மே-ஜூன் மாதங்களில் 8 முதல் 10 சதம் விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. எனவே சீஸனை தவிர்ப்பது நல்லது.

வெளிநாட்டு சுற்றுலா என்றால், வெளிநாட்டிற்கு சென்றவுடன் ஒரு சர்வதேச சிம் கார்டையோ அல்லது அந்த நாட்டு சிம் கார்டையோ வாங்கி கொள்வதானால் குறைந்த செலவில் நாம் பேச முடியும்.

நாம் தங்குவதற்கான விடுதிகளை, இணையத்தில் பதிவு செய்வதைவிட நேரில் சென்று பதிவு செய்தல் அங்கிருக்கும் சலுகைகளையும், தங்குமிடத்தையும் பார்த்து, பட்ஜெட் ஹோட்டல்களையும் தேர்ந்தெடுக்க வழிவகுக்கும். அடுக்குமாடிகளை தேர்ந்தெடுத்தல் சிறந்தது. குறைந்த செலவில் பால்கனி மேல் உல்லாசக் காற்று வாங்கலாம். மேலும் குழந்தைகளுக்கு இலவசமாக தங்கும் வசதி அளிக்கும் விடுதிகளை தேர்ந்தெடுக்கலாம்.

சுற்றிப் பார்ப்பதற்கு அங்குள்ள பஸ், மெட்ரோ ரயில் போன்ற சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். விடுதிகள் ஓய்வு நாட்களில் இலவசமாக சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்கின்றனவா என்பதை உறுதி செய்த பின்னரே நாம் செல்ல வேண்டும். அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்க்கான கூப்பன்கள் மற்றும் தள்ளுபடிகளை தேர்ந்தெடுக்கலாம்.

சுற்றுலாவின் நினைவாக ஒன்றிரண்டு பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அப்படியே வாங்கி ஆக வேண்டும் என்ற ஆசையிருந்தால், உள்ளூர் மார்க்கெட்டில் வாங்குங்கள். வாங்கும் அதே பொருள் சுற்றுலாத் தலத்தில் இருந்தால் அதன் விலை அதிகமாக இருக்கும்.

சுற்றுலாவை இப்படி திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் சேமிப்பையும், சந்தோஷத்தையும் அதிகரிக்கலாம். பயணம் என்றாலே மகிழ்ச்சி என்ற அனுபவத்தையும் உணரலாம்.