
![]() |
சோரியாசிஸ் |
இதற்கு வைத்தியம் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துவிட்டு தானாக மறைந்து குணமாகி விடும். குணமான பின் சோரியாசிஸ் வந்து போன சுவடு கூட தெரியாது.
![]() |
நோய் வந்து போன சுவடே இல்லை |
எப்படி வருகிறது என்பதற்கு விடை கிடைத்தால்தானே குணப்படுத்தும் வழியும் கிடைக்கும். வருவதற்கு காரணம் பூச்சிகளா? வைரஸ்ஸா? பாக்டீரியாவா? சாப்பிடும் உணவா? பரம்பரை நோயா? எதுவும் பிடிபடவில்லை, ஆராய்ச்சியாளர்களுக்கு.
சோரியாசிஸால் அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உள் உறுப்புகளும் பாதிக்கப்படுவதில்லை. உலகத்தில் இந்த நோய் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. உலகம் முழுவதும் இருக்கிறது. இருந்தாலும் ஏனோ நீக்ரோக்கள், செவ்விந்தியர்கள், ஜப்பானியர்களை அதிகமாக தாக்குவதில்லை. உலக மக்களில் 2 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு உள்ளது. உலகில் எந்த நாடும் இந்த நோய்க்கு தப்பவில்லை. ஸ்வீடனில் இது அதிக அளவில் இருக்கிறது
![]() |
சோரியாடிக் ஆர்த்ரிடீஸ் |
இந்த நோய் தொற்று நோயல்ல. உடலுறவு மூலமும் பரவக் கூடியதும் அல்ல. ஆனால், மரபு ரீதியாக வாரிசுகளுக்கு தொடர வாய்ப்பிருக்கிறது. சில சமயம் இது மூன்றாவது நான்காவது தலைமுறையையும் விட்டுவைப்பதில்லை. சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு இந்த நோய் வந்திருந்தால், அவர்கள் கருத்த நிறம் கொண்டவர்களை மணந்து கொண்டால் வாரிசுகளுக்கு இந்த நோய் வராது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
![]() |
பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை |
சோரியாசிஸ் நோய் ரோடு போட பயன்படுத்தப்படும் தாரை மூலப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்து மூலமே ஓரளவுக்கு குணமாகிறது. விடை தெரியா ஒரு சில நோய்களில் இதுவும் ஒன்று!