
சாக்கிரத்தில் சாக்கிரம் – சாக்கிரத்தில் சொப்பனம் – சாக்கிரத்தில் சுஷிப்தி – சாக்கிரத்தில் துரீயம் .,
1 . சாக்கிரத்தில் சாக்கிரம் – சாக்கிரத்தில் சொப்பனம் – சாக்கிரத்தில் சுஷிப்தி – சாக்கிரத்தில் துரீயம் .,
2. சொப்பனத்தில் சாக்கிரம் – சொப்பனத்தில் சொப்பனம் – சொப்பனத்தில் சுஷிப்தி – சொப்பனத்தில் துரீயம் .
3. சுஷிப்தியில் சாக்கிரம் – சுஷிப்தியில் சொப்பனம் – சுஷிப்தியில் சுஷிப்தி -சுஷிப்தியில் துரீயம் .
4 . துரீயத்தில் சாக்கிரம் – துரீயத்தில் சொப்பனம் -துரீயத்தில் சுஷிப்தி – துரீயத்தில் துரீயம் என ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு அவஸ்தைகள் உண்டு .,
1.A சாக்கிரத்தில் சாக்கிரம் :-
வார்த்தைகளை கேட்கும் போதாகிலும் ,அல்லது வேதாந்த சிரவணம் செய்யும் போதாகிலும் மனதை வெளி விவகாரங்களில் போக விடாமல் நிறுத்தி ,சொல்லும் சொற்களை சிரத்தையுடன் கேட்டு மறக்காமல் இருப்பது .,
1 B சாக்கிரத்தில் சொப்பனம் :-
தான் கேட்கும் வேதாந்த விஷயங்களை சரியாய் கவனித்து கேட்காமல் பராமரிக்கையாய் கேட்பதனால்,அவ்விஷயங்களில் சிலவற்றை மாத்திரம் ஞாபகத்தில் வைத்தும் ,சில வற்றை மறந்தும் போவதனால் ,இதரர்களுக்கு சரியாய் சொல்லத்தெரியாமல் இருப்பது ,இவ்வாறு உண்டாவதற்கு காரணம் என்னவென்றால் – சொல்லும் விஷயங்களை மனம் சில நேரம் கேட்கும் ,இவ்வாறு கேட்டுக் கொண்டே இருக்கும் சமயத்தில் மனம் வெளி விஷயங்களை நினைத்து சில நேரம் ஓடும் ,மனம் இவ்விரண்டு வேலை செய்வதினால் ,கேட்கும் போது ஞாபகமுள்ள விஷயங்களை சொல்லும் ,மனம் சொற்களை கேட்காமல் இருந்த போது ,சொன்ன விஷயங்களை சொல்ல தெரியாமல் மறந்தது போல் இருக்கும் ,இது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவமேயாம் .,
1 C சாக்கிரத்தில் சுஷுப்தி :-
வேதாந்தத்தை கேட்க வேண்டும் என்று உட்கார்ந்து ,மனதை அவ்விஷயங்களில் நிறுத்தாமல் வேறு எண்ணங்களை எண்ணி கொண்டு இருப்பதனால் ,கேட்ட விஷயங்களை இதரர்களுக்கு சொல்ல ஞாபகமே இல்லாமற் போவது ஆகும் .,
1 D சாக்கிரத்தில் துரீயம் :-
தத்துவ ஞானங்களை விசாரணை செய்து ,ஏகாந்த ஸ்தலத்தில் உட்கார்ந்து தான் கேட்ட விஷயங்களை எல்லாம் ஆலோசித்து கொண்டிருத்தல் ஆகும் .,
2 A சொப்பனத்தில் சாக்கிரம் :-
சொப்பனம் (கனவு ) கனவு கண்டு எழுந்த பிறகு ,தான் சொப்பனத்தில் ( கனவில் ) கண்ட விஷயங்கள் யாவற்றையும் மறவாமல் சொல்லுதல் ,ஏனென்றால் கனவில் மனம் எந்த இந்திரியங்களுடனும் சேர்ந்து எதையும் பார்க்கா விட்டாலும் தான் கனவில் கண்ட விஷயங்கலை எல்லாம் காலையில் மனம் எல்லோரிடத்திலும் சொல்வதற்கு காரணம் சொல்கிறேன் ., நமது இருதய கமலத்தில் அந்தர்யாமியாயும் ,சாஷி மாத்திரனுமாய் இருக்கும் ஆதமாவானது ,இரவு கனவில் கண்ட விஷயங்களை எல்லாம் காலையில் எல்லோரிடத்திலும் சொல்ல மனதிற்கு ஞாபகத்தை உண்டாக்குகின்றது .
ஆத்மாவானது சாஷிபூதம் என்று வேதங்களிலும் ,சாஸ்திரங்களிலும் ,பாடல்களிலும் ,பெரியோர்களாலும் ,சொல்லி இருப்பதற்கு இதுவே உண்மை என்று அறிவீர்களாக ,இது ஒவ்வொன்றும் பிரத்தியஷ அனுபவமாதலால் ,இக்கனவின் ரகசியம் தெரிவித்தோம் ,மேலும் ஆத்மா சாஷிபூதன் என்பதற்கு இந்த உண்மை போதுமானது ,இவ்வாறான ஆத்மாவை மாயை எனும் களிம்பு (அழுக்கு) மூடி கொண்டிருப்பதனால் ,ஜனங்கள் ஆசைஎனும் அகப்பட்டு மதிமயங்கி ,அழிந்து போகும் சரீரமும் ,வஸ்துக்களுக்கு உண்மை என்று நம்பி மோசம் அடைகிறார்கள் ,அவ்வாறு மோஷம் போன பொருளை மீட்க வேண்டும் .,
2 B சொப்பனத்தில் சொப்பனம் :-
சொப்பனத்தில் கண்ட விஷயங்களில் மனம் , சிலவற்றை கவனித்தும் சிலவற்றை கவனிக்காமலும் இருந்தபடியால் ,அவைகளில் ஞாபகத்திலும் ,சிலதும் ஞாபகத்தில் இல்லாமல் இருப்பது .
2 C சொப்பனத்தில் சுஷிப்தி :-
சொப்பனங்க்ண்டு எழுந்திருந்து சொப்பனத்தில் தான் கண்ட விஷயங்கள் பூர்த்தியாய் ஞாபகத்திற்கு வராமல் இருப்பது .,
2 D சொப்பனத்தில் துரீயம் :-
தான் சொப்பனத்தில் கண்ட நன்மை ,தீமைகளை விசாரித்து சந்தோஷ படாமலும் ,துக்க படாமலும் இவை எல்லாம் மனோவியாபாரமென நிச்சயித்து கொண்டு ஆத்ம ஞானத்தை விசாரித்திருப்பது ஆகும்.,
3. சுஷிப்தியில் சாக்கிரம் – சுஷிப்தியில் சொப்பனம் – சுஷிப்தியில் சுஷிப்தி -சுஷிப்தியில் துரீயம் .
4 . துரீயத்தில் சாக்கிரம் – துரீயத்தில் சொப்பனம் -துரீயத்தில் சுஷிப்தி – துரீயத்தில் துரீயம் ,
3 A சுஷிப்தியில் சாக்கிரம் :-
நித்திரையை விட்டு எழுந்து ,அந்நித்திரையின் சுகம் இன்னதென்று இதரர்களுக்கு சொல்லுதல் .,
3 B சுஷிப்தியில் சொப்பனம் :-
நித்திரை விட்டு எழுந்து நித்திரையின் சுகம் இவ்வகை தான் என தோன்றியும் தோன்றாமல் இருத்தல் .,
3 C சுஷிப்தியில் சுஷிப்தி :-
நித்திரை விட்டு எழுந்து ,நித்திரையில் தான் கண்டது சிறிதேனும் தோன்றாமல் இருத்தல் .,
3 D சுஷிப்தியில் துரீயம் :-
நித்திரை விட்டு எழுந்து இந்த நித்திரை அவஸ்தை அக்ஞானவிஷயம் ,இதற்கு சாட்சியான ஆத்மாவே சத்தியம் என தெரிந்து கொள்ளல் .,
4 A துரீயத்தில் சாக்கிரம் :-
நிஷ்டையில் இருக்கும் போது சாக்கிர வியாபாரங்களாகிய பிரபஞ்ச விருத்தி உண்டாவது ,
4 B துரியத்தில் சொப்பனம் :-
நிஷ்டையில் இருக்கும் போது சாக்கிர வியாபாரங்களாகிய பிரபஞ்ச விருத்தி தோன்றியும் தோன்றாமளிருத்தல் .,
4 C துரீயத்தில் சுஷிப்தி :-
நிஷ்டையில் எவ்வித சங்கல்பங்களும் ( எண்ணங்களும் ) இல்லாமல் இருத்தல் .,
4 D துரீயத்தில் துரீயம் :-
மேற் சொல்லிய 15 அவஸ்த்தை களும் இல்லாமல் இருந்து ,அகண்ட பரிபூரண பரப்பிரம்மமே தான் என்றும் ,தன்னை தவிர வேறு ஒரு வஸ்து இல்லை என்றும் தெரிந்து கொண்டு தானாகவே இருத்தல் ,இப்பதினாராவது பாகமே எல்லாவற்றிக்கும் சிரேஷ்டமான ஸ்திதி என தெளிவாய் தெரிந்து கொண்டால் சர்வமும் பிரம்ம சொரூபமே என அறிந்து கொள்வார்கள் .,நிறைவு .