
பெர்லின் ஹோப்ட்பெஹஃப் – ஜெர்மனி
நார்த் பார்க் வே கேபிள் – ஆஸ்திரியா
![]() |
‘நார்த் பார்க் வே கேபிள்’ ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம் |
ல கேர் டி ஸ்டரஸ்பொ – பிரான்ஸ்
![]() |
‘ல கேர் டி ஸ்டரஸ்பொ’ ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம் |
1883-ல் கட்டப்பட்ட இந்த பழமையான ரயில் நிலையம் 2007-ல் நவீனமயமாக புதுப்பிக்கப்பட்டது. 120 மீட்டர் உயரத்துக்கு மேல் முழுக்க முழுக்க கண்ணாடியால் போர்த்தப்பட்டதுபோல் கட்டினார்கள். வெயில் பட்டால் தங்கநிறத்தில் ஜொலிக்கும் ரயில் நிலையம் இது.
![]() |
‘ல கேர் டி ஸ்டரஸ்பொ’ ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம் |
கானாஸவா – ஜப்பான்
![]() |
‘கானாஸவா’ ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம் |
இது பழமையும் புதுமையும் இணைந்த கலவையால் உருவானது. இதில் ஜப்பானின் புராதனக் கட்டடக் கலையும் மேற்கத்திய பாணி வடிவமைப்பும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டது. 14 மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான நுழைவு வாயில் ஜப்பானின் பழமையால் உருவானது. இதன் மேற்கூரை 30 ஆயிரம் காண்ணாடி துண்டுகளால் ஆனது. இதுவும் சூரிய ஒளியில் ஜொலிக்கும் ரயில் நிலையம்தான்.
![]() |
‘கானாஸவா’ ரயில் நிலையத்தின் நுழைவாயில் |
ஆன்ட்வெர்ப் சென்ட்ரல் – பெல்ஜியம்
![]() |
‘ஆன்ட்வெர்ப் சென்ட்ரல்’ ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம் |
இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கு தேவாலயம் போலவே ஜொலிக்கும் அழகான ரயில் நிலையம். அரைவட்ட கோள வடிவில் மேற்கூரையும், பிரமாண்டமான தூண்களும் காண கண் கோடி வேண்டும். பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களின் சிறுசிறு மேற்கூரைகள் மையக்கூரையோடு இணைக்கப்பட்டுள்ளன. இதை ரயில் நிலையங்களின் தேவாலயம் என்று சொல்கிறார்கள்.
![]() |
‘ஆன்ட்வெர்ப் சென்ட்ரல்’ ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம் |
நம்ம ஊர் ரயில் நிலையங்களும் இப்படி ஜொலிப்பது எப்போது?