
வாழ்க்கையில் நிரந்தரம் என்று எதுவுமே இல்லை..குடும்பம் உறவுகள்..செல்வம் என்று அனைத்துமே காலத்தால் விழுங்கபடகூடியவைகள்தான்…
இதனை சரிவர புரிந்திருந்தாலே எதன்மீதும் அளவற்ற பற்றும் விருப்பமும் கொள்ளமாட்டோம்… அடுத்தபடியாக நம்முடைய பொசசிவ் குணத்திற்கும்..குழப்பங்களுக்கும் முக்கிய காரணியாக இருப்பது நம்முடைய நெகட்டிவ் எண்ணங்களே . இது ஒரு தன்னம்பிக்கையின் குறைபாடுதான்..
நமது உடல் உறுப்புகள் நலமாக இருந்தும்..கடக்கும் தூரம் நம்மாள் இயன்ற தூரமாயினும்..என்னால் இயலாதோ என்று ஒருகணம் தன்னம்பிக்கை இழந்தாலும்..நம்மாள் கடக்கவே இயலாது…
பாதிப்புகள் மற்றும் இயலாத வேலை எனினும் தன்னம்பிக்கையோடு என்னால் இயலும் என்று இறங்கிவிட்டாள் ஆச்சரியப்படும் விதத்தில் முடித்திருப்போம்
தன்னம்பிக்கையின் குறைபாட்டினாலேயே பொசசிவ் போன்ற காரணிகள் தோன்றுகின்றது…
அதன் தொடர்ச்சியாக மேலும் பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்… மன அழற்சி மிகும்…
உறவுளோ.. சொத்துக்களோ..மற்ற பிற வசதிகளோ..எதுவோ ஒன்று நம்மை பொசசிவ் கொள்ள வைக்கின்றது…
ஏன் சற்று ஆராய்ந்தால் தெரியும் நம்பிக்கையின்மை. நமது வாகனத்தைவிட அவர் பெரியதாக வசதியாக வாங்கிவிட்டாரே அன்பானவர் என்மீதுதான் அதிக அன்பா… அல்லது என்னைவிடுத்து வேற்றார்களிடம் அதிக பிரியமாக இருப்பாரோ என்ற உள்மன பொறாமைகுணம்.. சந்தேகம்தான்
நமது தன்னம்பிக்கையை குலைத்து… மன அழற்சியை ஏற்படுத்தி எதோ ஒரு கட்டத்தில் நடைபிணமாக்கிவிடும்.. சுயநினைவிழக்கச்செய்துவிடும்…
ஆராய்ந்தறிந்து நம்பிக்கை கொள்ளலாம்… தன்னம்பிக்கையோடு உறுதியோடு இருக்கலாம்… வெற்றிக்கான எண்ணங்களை வளர்த்துகொள்ளலாம்..
இது நமது..நமக்கு போதுமானது என்ற நிறைவான எண்ணமே பொசசிவ் இன்றி வாழவைக்கவல்லது
அதையும் மீறி நம் நம்பிக்கை பொய்த்தாலும் கவலைகொள்ள தேவையில்லை…
நமது தேர்ந்தெடுத்தல் சரியானதில்லைபோலும் ..என தன்னையே கடிந்துகொண்டு சரியானதை தெரிவு செய்யலாம்