
தன்னம்பிக்கை இல்லாதவர்களும்…. அடிக்கடி டென்ஷனாகின்றவர்களும்…. தனக்கென்று ஒரு வேண்டாத பழக்கத்தை வைத்திருப்பார்கள்..(மேனரிசம்) உதாரணமாக நகம் கடித்தல்..தலைமுடியை கலைத்துகொண்டும்..கோதிகொண்டும் இருத்தல்…
பேசும்போது முகம் பார்த்து நேராக..தெளிவாக பேசாமல் அங்கும் இங்கும் பார்த்துகொண்டு..குனிந்துகொண்டு கோர்வையில்லாமல்..தெளிவில்லாமல் பேசும் பழக்கம் உள்ள சிலரும் இப்படிபட்ட நிலையை சேர்ந்தவர்களே….
இப்படிபட்டவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள்ளேயே ஒடுங்கிபோயிருப்பார்கள்…. ஆண்களில் சிலர் அடிக்கடி போய் புகைபிடித்துவிட்டோ பாக்குகளை மென்றுகொண்டோ வருவர்..அப்போதுதான் ரிலாக்சாக ஃபீல்பன்னுவர்…
இதுவும் ஒருவகை தெளிவில்லாத சிந்தனையுடைவர்களும்… குழப்பமான..படபடப்பான மனநிலை உடையவர்களும்… எதற்கெடுத்தாலும் பயந்த சுபாவம் உடையவர்களும் செய்யகூடியவைகளே..
எனக்கென்ன நான் நல்லாதானே இருக்கேன்… என்பவர்கள்… இப்படிபட்ட பழக்கம் தம்மிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டால்.. மனதை லேசாகவும்..தெளிவான சிந்தனைக்கும்.. அமைதியான தெளிந்த நீரோடைபோன்ற மனநிலைக்கும் முயல வேண்டும்…
அப்படியே விட்டுவிட்டால் பின்னர்…. சரிசெய்ய இயலாத நீண்டநாள் பிரச்சனையாகவும்…. முற்றிபோன பிரச்சனையாகவும்… அதிக பாதிப்புகளை தரகூடியதாகவும் நாளடைவில் வளர்ந்துவிடலாம்….
எதனையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து களைந்துவிடுதல் நல்லதுதானே……முயற்சிப்போமே…..