Header Banner Advertisement

தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தால்


VILLANGASEITHI

print

தன் மீதே நம்பிக்கையில்லாமைகூட பெரும்பாலான மன குழப்பங்களுக்கும்..

வருத்தங்களுக்கும் காரணமாகின்றது…

எந்த இடத்தில் இருந்தாலும்…யாருடன் எங்கே இருந்தாலும்..

அது ஒரு சப்போர்ட்தான்… மற்றபடி நம்மைநாமே நம்பியிருத்தல்தான் உண்மை….

உதாரணமாக…. மிக பாதுகாப்பாக கட்டபட்ட ஒரு வீடு… தங்கியிருக்கின்றோம்….

திடீரென இடிந்து விழும்போது அந்நிச்சையாக நம் கைகாள்களை நம்பி ஓடிவந்துவிடுவதில்லையா…

கைபிடித்து நடந்துகொண்டிருக்கும் குழந்தை காலில் இடிபட்டுவிட்டால் சடனாக கையை உதறிவிட்டு தன் காலை பிடித்துகொள்வதில்லையா….

மரக்கிளை உடையும்போது..அதில் சாவதானமாக அர்ந்திருக்கும் பறவை உடனடியாக பறந்துவிடுவதில்லையா…

அப்படித்தான்….எல்லோரிடமுமே தன்னம்பிக்கை ஒளிந்தேயிருக்கின்றது….

நேரத்தில் தானே வெளிபட்டுவிடும் அதனை நம்பாமல் வேதனைகொள்வது அவசியமில்லை…

நமக்கு நம்மீதேயான நம்பிக்கை..நமது பலம் தெரியாதவரை..

அதனை நாம் உணராதவரை..எதனையும் சாதிப்பதோ..வெற்றிகொள்வதோ இயலாததாகும்…

நம்மைபற்றிய பிறரது பார்வை என்னவோ..பிறரது கருத்து என்னவோ…

அதனைதான் நம்புகின்றோம்….அதனால் ஏகபட்ட மனஉளைச்சல்தான்….

யாராவது நினைத்தால் நம்மை தரமற்றவனாக.. பலவீனமானவனாக ஒன்றுக்கும் உதவாதவனாக…

பேசி பேசியே அப்படியே ஆக்கிவிட முடியும்….

அதே சமயம்..எவ்வளவு பலம் குறைந்தவனாக..

தைரியமற்றவனாக இருந்தாலும் பேசி பேசியே எல்லாம் நிறைந்தவனாக மாற்றிவிடவும் முடியும்…

இப்படிபட்ட நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள்…

எடுப்பார் கைபிள்ளைபோல்… பலரும் பலவிதமாக செய்துவிடும் பதமான களிமண்போல் இருக்கின்றோம்

மற்றவர் கருத்துகளைவிட நம்மை நாமே நம்பிதான் பார்ப்போமே..

நமது பலத்தைதான் உணர்வோமே….