
திருவான்மியூரில் ஆட்டோ ஓட்டி வந்த சங்கர் பல விபசார பெண்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்தான். 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளியான ஆட்டோ சங்கருக்கு 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந் தேதி சேலம் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுதான் தமிழகத்தில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையாகும்.
ஒரு சிறுவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்தான் சென்னையச் சேர்ந்த கொலை கைதி சேட்டு. இந்த கொலை வழக்கில், அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலூர் ஜெயிலில் 1983 ஆம் ஆண்டு சேட்டு என்ற சந்துரு தூக்கில் போடப்பட்டான்.