Header Banner Advertisement

தயிர்ப் பச்சடி செய்முறை


001

print

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கேரட்
கோஸ் (உள்பாகம்)
தக்காளி
….
….
கறிவேப்பிலை
கொத்தமல்லி
பெருங்காயம்
கருப்பு உப்பு [Black Salt] – (விரும்பினால்)
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய்.

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்

வெள்ளரி, கேரட் போன்ற காய்களை துருவிக் கொள்ளவும்.

நறுக்கிய, துருவிய காய்கறிகள், பெருங்காயம் கலந்துவைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் நேரத்தில் தேவையான உப்பு, கருப்பு உப்பு (விரும்பினால்), கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும்.

சிறிது எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.

தயிர் சாதத்திற்குச் சொன்னதைப் போலவே தயிர்ப் பச்சடிக்கும் தாளிக்கும்போது அதிக எண்ணெய் அல்லது கலங்கிய எண்ணெய் உபயோகிப்பது பச்சடியின் நிறத்தையும் தரத்தையும் கெடுக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொதுவாக மேத்தி சப்பாத்தி, புளியோதரை போன்ற உணவுகளுக்கு முடிந்தவரை எல்லா காய்களும் கலந்து செய்யலாம்.

வெஜிடபிள் பிரியாணி, புலவு போன்ற காய்கறிகள் உள்ள உணவிற்கு அதில் இல்லாத காய்களாக(வெள்ளரி, தக்காளி..) மட்டும் சேர்த்துச் செய்யலாம்.

ஏற்கனவே அதிகக் காரமாக உள்ள உணவிற்கு, இதில் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவை இல்லை.

தாளிக்காமல் கூட, தினமும் ஏதாவது ஒன்றிரண்டு பச்சைக் காய்கறிகளிலாவது தயிர்ப்பச்சடி செய்து கோடைக் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது.