Header Banner Advertisement

தவலை அடை செய்முறை


001

print

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

அரிசியையும் பருப்புகளையும் மிளகு, மிளகாய் சேர்த்து மிஷினில் அல்லது மிக்ஸியில் தயாராக ரவைப் பதத்திற்கு அரைத்துவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து 4 கப் தண்ணீர் சேர்க்கவும்

தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தேங்காய்த் துருவல், அரைத்துவைத்திருக்கும் கலவையைக் கொட்டிக் கிளறவும்.

மேலே முதல் வகை அடைக்குச் சொன்ன முறையிலேயே உருளி அல்லது வாணலியில் அடைகளாகத் தட்டி மேலே மூடி வேகவைக்கவும்.

=============================================================

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பயத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

938915090_79e261aad0_m

செய்முறை:

அரிசியை தண்ணீரில் களைந்து, உலர்த்தி, ரவையைவிட சற்று பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, , பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து ஒரு கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் வைத்து, கொதித்ததும், உடைத்த ரவையைக் கொட்டி, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி வைக்கவும். (இதிலேயே அரிசி பாதி வெந்திருக்கும்.)

பருப்புகளை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், பருப்புகளுக்குத் தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை, கிளறி இறக்கியிருக்கும் அரிசி ரவையோடு கலந்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற வெண்கல உருளியில் அடிப்பகுதியின் ஓரங்களில் வரிசையாக 3 அல்லது 4 சிறிய(உள்ளங்கை அளவு) அடைகளாகத் தட்டி இறுதியில் நடுவிலும் ஒன்று தட்டி 7 அல்லது 8 டீஸ்பூன் எண்ணை விட வேண்டும்.

மேலே உருளியின் வாயை ஒரு தண்ணீருள்ள பாத்திரத்தால் மூட வேண்டும்.
மெதுவாக உருளியின் பக்கங்களை அடிக்கடி திருப்பிவிட்டுக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு பக்கமாக எண்னை நகர்ந்து அந்தந்தப் பகுதி அடை வேகும்.

நன்கு வெந்ததும் அப்படியே எடுத்துப் பரிமாறலாம். (திருப்பி விடாமலேயே மேல்பகுதி வெந்திருக்கும்.)

938915182_92f1636816

தவலை அடையை இந்த முறையில் செய்வதற்கு ‘கிளறிக் கொட்டிய அடை’ என்றும் பெயர்.

இதற்கு தேங்காயெண்ணை உபயோகித்தால் அல்லது சிறிதளவாவது கலந்து உபயோகித்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கு.

அரிசியை உடைத்து உபயோகிப்பதற்குப் பதில் எங்கள் வீட்டில் பொடியான அரிசிக் குருணையையே நேரடியாக உபயோகித்தும் பார்த்திருக்கிறேன்.

என்னிடம் தற்சமயம் உருளி இல்லாததால் வாணலியில் தான் செய்தேன். ஒரே நேரத்தில் நாலைந்தாகச் செய்யாமல் ஒரே பக்கமாக வாணலியைச் சாய்த்து வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக, சற்று பெரிதாகவும் செய்யலாம். பாத்திரத்தை உருட்டும் வேலை மிச்சம். உருளி மாதிரி இல்லாமல் வாணலிக்கு அதுதான் வசதி.