
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.
செய்முறை:
அரிசியைத் தனியாகவும், பருப்புகள் எல்லாவற்றையும் தனியாவும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரிசி, மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை சுமாராக அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின் பருப்புகளைச் சேர்த்து மொத்தமாக கரகரப்பாக ஆனால் இட்லிமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.(ஒரேயடியாக சேர்த்து அரைத்தால் பருப்புகள் அதிகம் மசிந்துவிடும்.)
நறுக்கிய கறிவேப்பிலை, தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.
சிறிது எண்ணையில், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த மாவில் கலக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியால் மாவை எடுத்துவிடவும்.
அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, இருபுறமும் சிவந்ததும், எடுத்து சூடாகப் பரிமாறலாம்.
நிறைய எண்ணை வைத்து ஒரே நேரத்தில் 3, 4 வடைகளாகச் செய்வதை விட கொஞ்சமாக எண்ணை வைத்து ஒவ்வொன்றாகச் செய்தால் நன்றாக வரும். அல்லது ஒரு வடை பாதிக்கு மேல் வெந்தபின் அடுத்த வடைமாவை விடலாம். மாவு தளர்வாக இருப்பதால் ஒன்றுடன் ஒன்று பிரச்சினை ஆகாமல் இருக்க இது உதவும்.
============================================================
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயம்
தேங்காய்
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.
செய்முறை:
பருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
மெலிதாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்.
எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கலக்கவும்.
வாணலியில் நன்றாக எண்ணை காய்ந்ததும் சிறு கரண்டியால் எடுத்துவிட்டு மிதமான தீயில் இருபக்கமும் சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
============================================================
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/8 கப்
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – 1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் – 4
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியையும் பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து உப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.
தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக அழுத்தாமல் கலந்துவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு, சிறு உருண்டைகளாக மாவை எடுத்து எண்ணை தடவிய வாழையிலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் வடைகளாகத் தட்டி எண்ணையில் நிதானமான தீயில் இருபுறமும் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
[மேலே இருக்கும் படத்துல் இருப்பவை, நான் ஊறவைத்தபின் கரண்ட் போய்விட்டதால் அதிகம் ஊறி மிக்ஸியில் கொஞ்சம் அதிகம் மாவாகிவிட்டது. இந்த மாதிரி நேரங்களில் சோம்பலைப் பார்க்காமல் கிரைண்டரை உபயோகிப்பது நல்லது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, கெட்சப்.