
தாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்தனை ஆண்டுகளுக்கு என்ன காரணம்? தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக விலையுயர்ந்த நவரத்தினக் கற்களைத் தேடிப் பார்த்து தருவித்துக் கட்டியதால்தான் இத்தனை ஆண்டுகள் உருண்டேடியிருக் கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலிருந்தும் இத்தகைய பொருட்களை கொண்டுவந்துள்ளான் ஷாஜகான்.
அப்படி என்ன இதில் இருக்கிறது? சன்ன ரக ‘மக்ரானா’ சலவைக்கற்கள் ராஜஸ்தானிலிருந்தும், கரும் பச்சை மற்றும் ஸ்படிகக் கற்கள் சீனாவிலி ருந்தும், நீல நிறக் கற்கள் திபெத்திலிருந்தும், lapis and lazuli என்று சொல்லப்படும் மிக நுணுக்கமான சிற்பக் கலை வேலைகளுக்குப் பயன்படும் நீலநிறக் கற்கள் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தருவிக்கப்பட்டன.
அதுமட்டுமல்ல! பச்சை வண்ண ஸ்படிகக் கற்கள் மற்றும் நீலம் கலந்த ஊதா நிறக் கற்கள் எகிப்திலிருந்தும், அடுக்கு படிக கொம்புக் கற்கள் (சிவப்பு) ஏமனிலிருந்தும், ஸஃபையர் என்னும் நீலக்கற்கள் ஸ்ரீலங்காவிலிருந்தும், பவழம் அரேபியாவிலிருந்தும், பச்சை வண்ண கனிமம் ரஷியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஸ்படிகக் கற்கள் இமயமலையிலிருந்தும், வெள்ளைக் கிளிஞ்ச ல்கள் மற்றும் முத்து சிப்பிகள் இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்தும் கொண்டுவந்து தாஜ்மஹாலை கட்டியிருக்கிறான் ஷாஜகான். ‘இதை கட்டிய கட்டடக் கலைஞர் இவ்வுலகத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது! இதன் வடிவமைப்பு அந்தக் கலைஞருக்கு சொர்க்கத்திலிருந்து கொடுக்கப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது!’ என்று தாஜ்மஹாலை கட்டட த்தைப் புகழ்ந்து, ஷாஜகான் கல் வெட்டு ஒன்றில் கூறியிருக்கிறார்.