
அறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில அரிச்சுவடி
‘ ஆரம்பப் பாடமானாலும் – பள்ளி இறுதிவரை விஞ்ஞானம்,கணிதம் சரித்திரம் -எல்லாமே இனிய தமிழில் – எதிலும்,எவற்றிலும் இனிய தமிழ்தான்
ஆங்கிலம் கட்டாயப் பாடம் என்றாலும் இனிய தமிழ்தான் உடன் உறவாடியது தமிழ் தானே வளர்ந்தது .
இந்தக் கல்விமுறை எங்கே ,எப்படி ஒழிந்தது?
ஆண்ட அரசியல்வாதிகளுக்கும் ,கல்வியாளர்களுக்குமே வெளிச்சம்
ஆங்கிலத்தை யாரும் பாலூட்டி வளர்க்கவில்லை !
இந்தி எதிர்ப்பில் ஆட்சியைப் பிடித்தவர்கள் கொடுத்த உரத்தில் தானே வளர்ந்தது!
சாதி மாதங்கள் வளர்ந்தன!
காளான் போல ஆங்கில கல்விச்சாலைகள் முளைத்தன!
தமிழ் என்மூச்சு என்று முழங்கியவர்களின் பிள்ளைகள் ஆங்கில மொழியில் பண்டிதர்கள்.!
இந்தியிலும் பேசுகிறார்கள்.!
தமிழை வளர்க்கிறேன் என்று தமிழின் பெயரால் வயிறு வளர்த்தவர்கள் செழிப்போடு வாழுகின்றனர்
இப்போது கிராமங்களில் கூட தமிழ் வளர்ப்பவர்களின் ஆங்கில மழலையர் பள்ளிகள் !
தமிழ்ப் பிள்ளைகளுக்கே தமிழ் தெரியாத அவலம்.!
தாய்மொழியின் காலை ஒடித்து ஆங்கில ஊன்றுகோல் கொடுக்கும்
இதே நிலை இன்னமும் நீடித்தால் —
தாய்மொழிக் கல்வி மெல்ல மெல்லச் சாகும்!
அதுபற்றி யாருக்கும் கவலை இல்லை! வெட்கமில்லை!
தார் சட்டியை எடுத்து முகத்தில் பூசுகின்றனர் கிளர்ச்சிகள் மேடைகளில்,காகிதங்களில்,
இப்போது ஊடகங்களில் கூட விவாதங்களாக !
வேலியே பயிரை மேய்கிறது!
ஆக்கம் :ஜெயா வெங்கட்ராமன்