Header Banner Advertisement

திகார் ஜெயில் பற்றி தெரியுமா?


www.villangaseithi.com

print
டெல்லி மேற்குப் பகுதியில் திகார் என்ற கிராமத்தில் 53 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஜெயில் ஆசிய அளவில் பெரியது. இங்கே, சுமார் 12,000 கைதிகள் உள்ளனர். இந்தச் சிறை வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. சிறைச்சாலை எண் 1-ல் உள்ள வார்டுகள் மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்படுவதைப் பாராட்டி, மாடல் வார்டுக்கான ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இங்கு ஜெயில் காம்பளெக்ஸ் நான்கில்தான் வி.ஐ.பி.,க்களை அடைத்து வைப்பார்கள். தனி அறையில் அடைக்கப் பட்டாலும், கைதிகளுக்கு பணிவிடை செய்ய ஒரு நபர் உண்டு.
ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த டிரஸ்ஸையும் கைதி அணியலாம். கைதிகளே அவரது உடையை துவைத்துக் கொள்ள வேண்டும். அயர்ன் பண்ண சிறைச்சாலையில் வசதி உண்டு. இங்கு ஒரு ஸ்பெஷல் கேன்டீன் உண்டு. இங்கே ஸ்நாக்ஸ் முதற்கொண்டு அனைத்து அயிட்டங்களும் கிடைக்கும். மாதம் நாலாயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இந்த தொகையைக் கொடுத்து டோக்கன் வாங்கி செல்லில் வைத்துக் கொள்ளலாம். ஹை ரிஸ்க் வார்டில் இருப்பவர்கள் இந்த கேன்டீனுக்கு போக அனுமதியில்லை. அதனால், ‘சேவாதார்’ என்று அழைக்கப்படும் ஹெல்பர்களை பொருள் வாங்கி வர பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதே சிறைச்சாலையில் வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களும் உதவுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கும் காசு கிடைக்கும். ஏர்கூலர், ஃபேன், டி.வி. இருக்கும். ஆனால் தமிழ் சேனல் தெரியாது. ஆனால், சிறைச் சாலையின் பொது இடத்தில் வாரத்துக்கு இருமுறை டி.வி.டி., பிளேயர் வைத்து திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். விரும்பும் பத்திரிகையை வார்டுக்கு வரவழைத்துப் படிக்காலம். செல்லின் ஒரு மூலையில் இண்டியன் டைப் டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

பெண் பத்திரிகையாளர் ஷிவானி கொலைவழக்கில் கைதான அரியானா மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.சர்மா இந்தச் சிறையில்தான் அடைக்கப் பட்டுள்ளார். அதோடு ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான ஆ.ராசா, சித்தார்த் பால்வா, ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோரும் இந்தச் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிபுசோரன், மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டில் சிக்கிய கேதன் தேசாய், டெல்லி சாமியார், காமன்வெல்த் ஊழலில் சிக்கியவர்கள் இந்த ஜெயிலில்தான் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு கைதிகளுக்கு டால் ரொட்டி, ராஜ்மா சாவல், கடி சாவல்சப்ஜி போன்ற உணவுகள்தான் தருவார்கள். தினமும் இரண்டு வேலைதான் சாப்பாடு. நான்வெஜ் கிடையாது. உடையைப் பொறுத்த வரையில், எந்த டிரஸ்ஸ§ம் அணியலாம். கட்டுப்பாடு இல்லை. கைதியின் இன்ஷியல் வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் பார்வை யாளர்களை சந்திக்க அனுமதிக்கிறார்கள். சந்திப்பு நேரம் அரை மணி நேரம் மட்டுமே. பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள் கூச்சல், குழப்பமாகத்தான் இருக்கும்.

எப்போதும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையங்களில்தான் இந்த திகார் சிறைச்சாலை இருக்கும். உள்வட்டப் பாதுகாப்புகளை டெல்லி யூனியன் பிரதேச சிறைத்துறை போலீசாரும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிவட்ட பாதுகாப்புப் பணியிலும் இருக்கிறார்கள். மேலும், கணகாணிப்பு போன்ற பணியில் தமிழக ஆயுதப்படை போலீசார் ஆயிரம் பேர் பல ஆண்டுகளாக காவல் பணியில் இருக்கின்றனர். ஜெயிலின் டி.ஜ.¤பி.,-யாக தற்போது உள்ள நீரஜ் குமார் ஐ.பி.எஸ்., கறார் பேர்வழி. வெளியில் இருந்து வரும் பழங்கள் போன்ற எதையும் உள்ளே அனுமதிக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார்.