Header Banner Advertisement

திருவாதிரைக் கூட்டு செய்முறை


002

print

தேவையான பொருள்கள்:

பூசணி, பரங்கி, வாழை, அவரை, கத்தரிக்காய்*, கொத்தவரங்காய், பீன்ஸ், உருளை, கேரட், சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, காராமணி,…..

வேர்க்கடலை, பட்டாணி (ஊறவைத்தது)
துவரம் பருப்பு – 1/2 கப்
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி

மசாலா அரைக்க:
மிளகாய் வற்றல் – 10
தனியா – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1 மூடி

தாளிக்க:
எண்ணை, கடுகு, கருவேப்பிலை

செய்முறை:

மேலே உள்ள காய்கறிகளை நீளவாக்கில் அல்லாமல் கொஞ்சம் பெரிய உருண்டை வடிவமாக(cubes) நறுக்கிக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் மற்றும் வேர்க்கடலை, பட்டாணி சேர்த்து கூட்டுத் தொகை ஒற்றைப்படை எண்ணில்(7,9,11..) இருக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை. ஒருவேளை ஒரு காய் குறைந்தால் தேங்காயையும் ஒரு காயாக எண்ணிக் கொள்ளலாம், அல்லது ஒரு பச்சை மிளகாயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, தனியா, பெருங்காயத்தை சிறிது எண்ணையில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு நீரில் வேகவைக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், புளியைக் கரைத்து வடிகட்டிச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்க்கவும்.

கடைசியாக வேகவைத்துள்ள துவரம்பருப்பையும் சேர்த்து இறுகும்வரைக் கிளறவும்.

எண்ணையில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

மற்ற காய்களுக்கு நடுவில் அதிகமாக வெந்த கத்திரிக்காய் இருப்பது பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம். நான் தவிர்த்துவிடுவேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

திருவாதிரைக் களி