Header Banner Advertisement

திருவோடு இன்றி தமிழகத்தில் வலம் வரும் டுபாக்கூர் செய்தியாளர்களை கண்டு கொள்(ல்லா)ளாத தமிழக காவல்துறை!!


001

print

தமிழகத்தை பொறுத்தமட்டில் பெரும்பாலாேனார் ஊடகத் துறையில் பணியாற்றாமல் வாகனங்களில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு ஊடகத் துறையினர் எனும் போர்வையில் பந்தாவாக நகரை வலம் வந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டே உள்ளனர். அவ்வாறு சுற்றித் திரியும் பலர் குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அதற்கு நிறைய ஆதாரங்கள் காவல் துறையினரிடமே உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :-

பத்திரிகையாளர்கள் என்பவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகள், நாட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளை பிரதிபலிப்பவர்களாக, சமூக அக்கறை கொண்டவர்களாக இருந்து வந்தனர். ஆனால் மற்ற ஊர்களில் எப்படியோ? திருப்பூரில் நிலைமை தலைகீழாகிவிட்டது.

திருப்பூரில் டீ ஆற்றியவர்கள், வடை விற்றவர்கள், ஆட்டோ ஓட்டியவர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் என தமிழில் தன் பெயரையே எழுதத் தெரியாத தற்குறிகள் பலர் ஏதோ ஒரு தொழிலில் கூலி வேலை செய்து கொண்டிருந்துவிட்டு, பணம் கிடைக்கிறதே எனும் ஆசையில் பணவெறிபிடித்து சட்டப்புறம்பான செயல்களில் ஈடுபடுவோர், பத்திரிகையாளர் என்ற போர்வையில் வலம் வந்து கொண்டுள்ளனர்

இந்த தற்குறிகள் சட்டப்புறம்பான தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று ஏதோ ஒரு பத்திரிகையில் சேர்ந்து, நிருபர் எனும் போர்வையில் கம்பீரமாக வலம் வந்துஒரு பெரிய கூட்டமாகத் உருவாகியுள்ளனர்.

ஒவ்வொரு அரசு அலுவலகம் மற்றும் டாஸ்மாக் கடைகளிலும் மாதம் தவறாமல் மிரட்டி மாமூல் வாங்கி பிழைப்பு நடத்துபவர்களுக்கும், இதழியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

திருப்பூர் மாநகராட்சி, ஆர்.டி.ஓ., அலுவலகம், அரசு அலுவலகங்கள் என சுற்றி வந்த இவர்களின் ‘திருவோடு’ கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் பக்கமும் நீண்டு விட, காரி உமிழ்கின்றனர் திருப்பூர்வாசிகள். திருப்பூரில் கடந்த ஒரு ஆண்டுக்குள் மட்டும் பனியன் கம்பெனிகளில் கூலி வேலை செய்து வந்தவர்கள், ஆட்டோ ஓட்டியவர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் என பல்வேறு நபர்களும் நிருபராகிவிட்டனர். ஓரிரு பிராத்தல் வழக்குகளில் மாட்டிய புரோக்கர்கள் கூட நிருபர் என சொல்லிக்கொண்டு சுற்றுகின்றனர். இதனால் உண்மையான பத்திரிகையாளர் நிலை பரிதாபமாகி உள்ளது.

சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேட்பு மனு பரிசீலனையின்போது, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் போட்டோ, வீடியோ எடுத்த பத்திரிகையாளர்களை பார்த்து ஜெயமணி என்ற பெண் வேட்பாளர் காரித்துப்பாத குறையாக திட்ட, அதை துடைத்துக்கூட போடாமல் சிரித்துக் கொண்டே வந்தார்களாம் முன்னணி டி.வி., நிருபர்கள். திருப்பூர் மாநகராட்சி அலுவலகமே கை கொட்டி சிரிக்கிறது. அப்படி என்ன சொல்லி அந்த பெண் திட்டினார் என்று கேட்கிறீர்களா?

தனது வேட்பு மனு தள்ளுபடியானபோது அங்கிருந்த பத்திரிகையாளர்களை பார்த்து ‘ நீங்கள் எல்லாம் சோறு தானே தின்கிறீர்கள்? அக்கா தங்கச்சியோடதான் பிறந்தீங்கனா இந்த செய்தியை வெளியிடுங்கள். காச வாங்கிட்டு திரியாதீங்க’ என்று கத்தி உள்ளார். இதை கேட்டு துளிக்கூட ரோஷமே வராமல் சிரித்துக்கொண்டே சென்றார்களாம் பிரபல முன்னணி டி.வி., நிருபர்கள் 2 பேர். பொதுமக்களுக்கு வழிகாட்டியாக ‘கலங்கரை விளக்கமாக’ இருக்க வேண்டிய நிருபர்கள் இப்படி எச்சிலை பொறுக்கும் நாய்களாகி விட்டதைக் கண்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் இதை சொல்லி கிண்டல் செய்கிறார்கள். அதைக் கேட்டும் சிரித்துக் கொண்டே செல்கிறார்களாம் இந்த செய்திப்புயல்கள். இதனால் மொத்த பத்திரிகையாளர்களுக்கும் கெட்ட பெயர் ஆகிவிட்டது.

திருப்பூரில் ஏதாவது ஒரு அரசு அலுவலகத்திற்குச் சென்று “ரிப்போர்ட்டர் வந்திருக்கிறேன். ஆபீசரை பார்க்க வேண்டும்” என்று சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா? எந்த பிரச்சினையும் இல்லாம இரண்டு 100 ரூபாய் நோட்டுகள் அலுவலக உதவியாளர் மூலம் வரும். அந்தளவுக்கு இந்த ஈனப் பிறவி பிச்சைக்காரர்கள் பிரபலமாகிவிட்டனராம்.

இதேபோல தமிழகத்தில் அதிக அதிகாரம் கொண்ட கட்சி டி.வியின் திருப்பூர் நிருபர் என கூறி “எனது டி.வி.,யில் செய்தி வர வேண்டுமென்றால் ரூ.2000 ஐ எனக்கும், எனது அசிஸ்டண்டுக்கு ரூ.500ம் என 2500 தர வேண்டும்” என்று பகல் கொள்ளை அடிக்கிறாராம். இப்படி பணத்தை ஆட்டைய போட்டே திருப்பூரில் தனது வீட்டில் பங்களா ரேஞ்சுக்கு 2வது தளம் கட்டி விட்டாராம். அடுத்து சொகுசு கார் வாங்க வேண்டும் என அதற்கான வசூலில் இறங்கி விட்டாராம்.

இல்லாத பத்திரிக்கை சங்கத்திற்கு தலைவர் என்று கூறிக்கொண்டு அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் மிரட்டி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை ஆக்கிரமித்து போலி பிரஸ் கிளப் நடத்தி வருபவர்கள் , தீபாவளி நெருங்கிய நேரத்தில் தமிழகத்தில் அதிக அதிகாரம் கொண்ட கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டன் வரை மிரட்டி கறார் வசூல்வேறு, அதுமட்டுமா? பிரிண்ட் ஆகாத பெயர்களில் பேப்பர் நிருபர்களூம், தெரியாத டி.வி., நிருபர்களும் என தீபாவளிக்கு வசூல் செய்யும் கனவில் சுற்றி கல்லா கட்டி விட்டனராம் .

திருப்பூரில் மட்டும் நிருபர்கள் என்ற பெயரில் 150 பேர் சுற்றி வருகின்றனர். இது தவிர 500க்கும் அதிகமான பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுற்றி வருகின்றன. இத்தனையுமாக சேர்ந்து திருப்பூரில் நிருபர்கள் என்றால் பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழில் செய்வோர் என அனைவருமே அஞ்சுகிறார்கள். பிச்சையும் எடுப்போம், கொள்ளையும் அடிப்போம். கொஞ்சம் கூட வெட்கப்படவே மாட்டோம் என்று சுற்றி திரியும் தமிழகத்தில் அதிக அதிகாரம் கொண்ட கட்சி டி.வியின் திருப்பூர் நிருபர் உள்ளிட்ட இந்த கும்பலுக்கு கடிவாளம் போடுவது யார் என்று தெரியாமல் பலர் தவித்துக் கொண்டு குமுறுகின்றனர். உண்மையான பத்திரிகையாளர்கள் தலைநிமிர்ந்து வெளியில் செல்லவே கேவலமாக இருந்து வருகிறது.

முன்னணி டி.வி. மற்றும் பத்திரிகைகளின் பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் மேற்கண்ட நபர்கள் திருந்த வேண்டும். இல்லை என்றால் புகைப்படம் வெளியிட்டு கேவலப்பட்டு, அசிங்கப்படுவார்கள் என உண்மையான ஊடகவியலாளர்கள் எச்சரிக்கிறோம் என்று வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்பட்டுள்ளது .

எது எப்படியோ, டீ ஆற்றியவர்கள், வடை விற்றவர்கள், கூலி வேலை செய்து வந்தவர்கள், ஆட்டோ ஓட்டியவர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் தன் பெயரையே எழுதத் தெரியாத சட்டப்புறம்பான செயல்களில் ஈடுபடும் தற்குறிகளை தமிழகத்தில் திருவோடு இன்றி ஊடகத் துறையின் பெயரை அவமானப்படுத்தி பெரும்பாலோனரை பிச்சை எடுக்க வைத்த பெருமை ஊடக நிறுவனம் எனும் பெயரில் வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி சம்பளம்கூட கொடுக்க வக்கு இல்லாமல் ஊடகம் நடத்தி வரும் உரிமையாளர்களையே சாரும்.

செய்தியாளர்கள் மற்றும் செய்திப் படப் பதிவாளர் எனும் போர்வையில் திருவோடு இன்றி தமிழகத்தில் வலம் வரும் டுபாக்கூர்கள்மீது தொழிலாளர்கள் நலத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இனியாவது நடவடிக்கை எடுத்தால் சரி .