Header Banner Advertisement

துர்கா பூஜையை விடாத பிரணாப்.!


www.villangaseithi.com

print
மேற்குவங்க மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது துர்கா பூஜை. இதற்காக எவ்வளவு பெரிய அப்பாயிண்ட்மென்ட் இருந்தாலும் ஒத்திவைத்து விடுவார்கள். அதில் பிரணாப் முகர்ஜியும் விதிவிலக்கல்ல.! இதை அவரது தனிப்பட்ட வாழ்வில் விடமுடியாத பழக்கம் என்று கூட சொல்லலாம். ஆண்டு தோறும் ‘துர்கா பூஜை’ விழாவினை தனது சொந்தக் கிராமமான மிரதியிலுள்ள மூதாதையர் இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான சிவில் அணு ஒப்பந்தத்தில் அமெரிக்க மந்திரி காண்டலீசா ரைசுடன் கையெழுத்திடுவதையே ஒரு வாரம் ஒத்தி வைத்து, துர்கா பூஜையைக் கொண்டாடி மிரதி கிராமத்துக்கு சென்றார் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.