
இதற்கு நேர் எதிரான ஒன்று ‘ஸ்லீப் மையோக்லோனஸ்’ என்பது. இந்த உபாதை கனவுகளுக்கு ஊடாகத் தோன்றுகிறது. கனவில் யாரவது அடிக்க வந்தால், தூங்குபவர் கண்ணைத் திறக்காமல் படுத்தபடியே எதிரியை பந்தாடிக் கொண்டிருப்பார். எந்தவொரு காரணமும் இல்லாமல் தூக்கத்திலேயே திடீரென்று மரணம் ஏற்படுவதும் உண்டு. இந்த மரணத்தை மருத்துவத்தில் ‘கட்டில் சாவு’ என்கிறார்கள். இதற்கு’ஒன்டைன்’ என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது.
என்னதான் இப்படி மாற்றி மாற்றி பெயர் வைத்தாலும் இந்த மரணத்துக்கான காரணம் மட்டுமே மர்மமாக இருக்கிறது. இப்போதுதான் லேசான விடைக் கிடைத்திருக்கிறது. அதன்படி இது யாருக்கு வரும் என்று ஓரளவு கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளையில் பிறவிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் வரும். முதுகெலும்பில் அடிபட்டவர்கள், தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் ஆகியோருக்கு காரணமே இல்லாமல் தூக்கத்தில் மரணம் ஏற்படும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தொண்டையில் வளரும் டான்ஸில் சதை வளர்ச்யில் கூட இத்தகைய ஆபத்து இருப்பதாக சொல்கிறார்கள். இப்போது இந்த கட்டில் மரணம் பற்றி நரம்பியல் நிபுணர்கள் மட்டுமல்லாமல், காது, மூக்கு, தொண்டை நிபுணர்களும், எலும்பு மருத்துவர்களும் கூட ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இப்போது இந்த தூக்க மரணத்தை தடுக்க கருவிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.’கண்ட்ரோல்டு பாசிடிவ் ஏர்வே பிரஸ்ஸர்’ என்ற கருவியைத் தூங்கும்போது பொருத்திக்கொண்டால் இந்தக்கருவி மூளையின் உதவி இல்லாமல் தானாகவே சுவாசத்தைப் பார்த்துக்கொள்ளும். இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு திடீரென்று ஏற்படும் கட்டில் சாவுகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன. ஆனாலும், காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தால்தான் மனிதர்கள் நிம்மதியாக தூங்கமுடியும்.