Header Banner Advertisement

தேசிய விளையாட்டு ‘ஹாக்கி’ அல்ல.!


www.villangaseithi.com

print
நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நாம் அனைவரும் கூறி வரும் நிலையில், நாட்டின் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியது. ஆனால், இந்திய அரசு இணையதளமான www.india.gov.in ல் இந்திய தேசிய விளையாட்டு என்ற தலைப்பில் ஹாக்கி குறிப்பிடப்பட்டு ஒரு கட்டுரை வெளியானது.
இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிரஷார் என்ற 10 வயது சிறுமி சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவல கத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் தேசிய கீதம், விளையாட்டு, விலங்கு, மைதானம், மலர், தேசிய சின்னம் ஆகியவை குறித்து அறிவிப்புகளின் அதிகாரப்பூர்வ நகல்களை அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம் தேசிய விளை யாட்டு தொடர்பான விசாரணை என்பதால் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.
இதுதொடர்பாக, ஐஸ்வர்யாவுக்கு பதில் தெரிவித்து விளையாட்டு அமைச்சக செயலாளர் சிவபிரதாப் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதையும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசு இணையதளத்தில் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று இடம் பெற்று உள்ள நிலையில், நமது நாட்டுக்கு தேசிய விளையாட்டு என்று எதுவும் கிடையாது என்று விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது சர்ச்சயை ஏற்படுத்தியது.