
கரடு முரடான பாதையில் செல்ல நேரிடும்போது நாம்தான் சற்று பார்த்து நிதானமாக போகவேண்டும்…
அதைவிடுத்து பாதையையும் விதியையும்…அதற்கு காரணமானவர்களையும் நொந்துகொள்வதால் ஆககூடியது ஒன்றுமேயில்லை… இழப்பும் வேதனையும் நமக்கேதான்..
வாழ்க்கை எந்த மாதிரி அமைந்துவிட்டதோ… என்ன சூழலில் வாழவேண்டிய நிர்பந்தம் அமைந்துவிட்டதோ..யார்யாரால் என்னன்ன தொந்தரவுகளை சந்திக்கவேண்டி வந்தாலும்….
மனம் தளராமல்…சோர்வடையாமல்…. வருவதை எதிர்கொள்வதை தவிர வேறு ஒன்றும் வழியில்லை என முடிவானபின்…. உற்சாகத்தோடு…. மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு… எதிர்கொள்வதே..மன உளைச்சலில் இருந்து பாதுகாப்பு தரகூடியவை
மனதிற்குள் வேதனையையும்..கவலையையும் அடக்கிகொண்டு… வேண்டாவெறுப்பாக…. மனதளர்ச்சியோடு…கடமைக்கு பயத்தோடும் படபடப்போடும்..எதிர்கொள்வது… நன்மையல்ல….
நடந்ததோ..நடந்துவிட்டது…. உற்சாகத்தோடவே இருப்போம்…எதிர்கொள்வோம்…. நன்மையிலேயே முடியும்.