
பலரிடம் பேசும்போது அவர்களது பயத்திற்கும்… மன அழுத்தத்திற்கும்.. படபடப்பிற்கும்.. முக்கிய காரணமாயிருப்பது.. நம்பகதன்மையே என்பது புரியும்..
எதனை அடைந்தால் அவர்கள் நம்பிக்கையோடும்.. இன்பத்தோடும்.. மன அமைதியோடும் வாழ்வார்கள் என்று அவர்களுக்கே புரிவதில்லை… ஒரு தெளிவை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்வதில்லை…
எப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலைகளிலும்… ஒரு தீர்க்கம்.. தெளிவை மேற்கொண்டு…இன்னதை செய்வோம் என்று ஒரு முடிவை மேற்கொண்டு செயல்படுத்தாமல்…எதனை பார்த்தாலும்… என்ன விஷயங்கள் கேள்விப்ட்டாலும் அதன்மீது மனதை ஓடவிட்டு குழம்பிக்கொள்வது…
காலபோக்கிற்கு ஏற்ப..இடம்மாறி…நிறம்மாறி… படபடப்பிற்கு உள்ளாகின்றனர்…
மன அழுத்தத்திற்கும்… தற்கொலை முயற்சிக்கும் முக்கிய காரணம் தன்னிடம் நம்பிக்கை வைக்காமல் பிறரையே சார்ந்திருத்தல்..புறப்பொருளையே நம்பி வாழ்தல்..
தன்னால் என்னவெல்லாம் இயலும்..என்னவெல்லாம் சாதிக்க முடியும்..எதையெல்லாம் சமாளித்துக்கொள்ள முடியும் என்பதை நம்புவதே இல்லை…
எது நடந்தாலும்..என்ன எதிர்பார்த்தாலும் ஒரு படபடப்போடும்.. பரிதவிப்போடும்…எல்லாவற்றையுமே ஆதங்கத்தோடும் குழப்பத்தோடும் பார்த்துகொண்டிருப்பது…
எத்தனையோ அற்புதமான விஷயங்கள் நிறைவேற.. தன்னையும் பிறரையும் பாதுகாத்துக்கொள்ள…மன அமைதியோடு வாழ…
எப்படிபட்ட சூழ்நிலைகளிலும் ஒரு அமைதியை… தீர்க்கமான தீர்மானத்தை..முக்கியமாக தன்னை நம்பலாமே..முயற்சிப்போம்