Header Banner Advertisement

நம்மால் எல்லாவற்றையுமே கட்டுப்படுத்த இயலுமா ?


www.villangaseithi.com

print

இந்த உலகில் பிறப்பையும் இறப்பையும் தவிர மற்ற எல்லாவற்றையுமே நம்மால் கட்டுப்படுத்த இயலும் என்றே நினைக்கின்றேன்….

நம்முடைய செயல்கள்..எண்ணங்கள்… வாழும் முறைகள்.. உணவு… என எல்லாவற்றையுமே கட்டுப்படுத்தவும் மாற்றியமைக்கவும் நம்மாள் முடியும்..

மற்றவர்களுடைய செயல்கள்…பிற உலகில் ஏற்படுகின்ற துன்பம்.. விளைவுகள் போன்றவற்றை முழுமையாக கட்டுப்படுத்த இயலாவிடினும் அவற்றின் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்..

முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளமுடியுமே….அவற்றை அறிந்து விலகியிருக்கவும் முடியுமே…மாட்டிகொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை..கஷ்டபட்டுதான் ஆகவேண்டும் அது விதி என்று இருக்கவேண்டியதில்லை…

நாம் குழந்தையாக..அறியாத வயதிலிருந்தபோது.. எல்லாவற்றையும் கேட்டு..கேட்டு தெரிந்துகொண்டோம்… அதே வயதாக..ஆக..எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையோடு… மேதாவியாக… புதிய விஷயங்களை அறிந்துகொள்வதிலும்.. ஏற்றுக்கொள்வதிலும் அசட்டையாக இருந்துவிட்டதனால்

பல துன்பங்களை எதிர்கொள்ளவேண்டி வந்துவிட்டது…அதுதான் நமது துன்பங்களுக்கு முதற்படியாக கருதபடும்… அதன்விளைவாக மனச்சோர்வும் மன அழுத்தமும் இலவச இணைப்பாக கிடைத்தது…

நடந்து முடிந்ததை மாற்ற இயலவே இயலாது என்றில்லை… இருள் நீக்க ஒரே வழி ஒளியேற்றுவதுதான்.. நமது மனதின் கதவுகளையும் ஜன்னல்களையும் நம்மிடமே இருக்கும் சாவி கொண்டு திறந்தாலே போதும்…

எல்லாம் ஒளிமயமாகும்..வழி புலப்படும்..அறியாமை இருளிலிருந்து வெளிவரலாம்….நோயின்றியும்..மகிழ்வோடும் வாழலாம்…

முயற்சிப்போம்…..