
நம்முடைய வலிகளும்…நம்முடைய வருத்தங்களும் நம்மை சோதிக்க மட்டுமே வந்தவை அல்ல..நம்மை வலுப்படத்தவும் வந்தவைகள்…
எந்த பிரச்சனையாக இருந்தாலுமே…அது..அதற்கான ஒரு தீர்வோடுதான் வரும்..நாம் அதனை சரிவர உணர்ந்துவிட்டால் போதும் எளிதில் கடந்துவிடலாம்..
அதனை உணர்வதில்தான் தவறுகள் செய்து மேன்மேலும் வருத்தங்களுக்கு ஆட்பட்டுவிடுகின்றோம்….
எத்தனையோ…நிகழ்வுகளும்..நடவடிக்கைகளும்..உங்களுக்கு துயரமளிப்பதாக இருந்தாலும்…. அதனை நீங்கள் எவ்விதம் எடுத்துகொள்கின்றீர்கள் என்பதை பொருத்தே அதன் பாதிப்புகளும்..வெற்றிகளும் தீர்மானிக்கப்படுகின்றது….
நம்மாள் தாங்கவேமுடியாத சுமைகள் பெரும்பாலும் நம் தலையில் சுமத்தப்படுவதில்லை… கடந்துவந்த பாதைகளை கொஞ்சம் அவ்வப்போது திரும்பி பார்த்துகொள்ளுங்கள்…
அது மிக உபயோகமாக இருக்கும் உங்கள் வாழ்க்கையை நல்வழியில் வெற்றிகரமாக எளிதாக செலுத்துவதற்கு…
நாம் அடைந்த அனுபவங்கள் பல சில நமக்கு மிக பயனுள்ளதாகவும்..தற்போதைய பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும் உபாயமும் அங்கே நமக்கு கிடைக்கலாம்…
நம்முடைய சோதனைகளும் வேதனைகளும்… நம்முள் அடங்கி கிடக்கும் நற்பண்புகளை வெளிப்படுத்தவும்… நம்மை பன்படுத்தவும்..நம் திறமைகளை வெளிகொண்டுவரவுமே வந்துள்ளது என்று கொஞ்சம் மாற்றி சிந்தித்து பார்க்கலாமே
நீங்களும்..நானும்தான்….