
இந்திய நாடாளுமன்றக் கட்டடம் ‘சன் சாத்பவன்’ என்று அழைக்கப்படுகிறது. இது 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் ஏறத்தாழ ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் நடைப்பாதைகயில் 144 அகன்ற தூண்கள் உள்ளன. இந்தக் கல்தூண்களின் உயரம் 82 மீட்டர். நாடாளுமன்றத்துக்கு 12 நுழைவு வாயில்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மேலவை, கீழவை என இரு அவைகள் உண்டு. ஆண்டுக்கு மூன்று முறை கூட்டத் தொடர் நடைபெறும்.
1. பட்ஜெட் கூட்டத்தொடர். இவை, பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடை பெறும். 2. மழைக்காலக் கூட்டத்தொடர். இவை, ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். 3. குளிர்காலக் கூட்டத்தொடர். இவை நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும்.