Header Banner Advertisement

நிர்வாகத்தை திறம்பட நடத்த நிர்வாகி செய்ய வேண்டியவை !


001

print

சிறிய நிர்வாகமோ..பெரிய நிர்வாகமோ…. ஒரு நிர்வாகியின் பிரச்சனையில் பாதி தனது மன உளைச்சலை சமாளிப்பதுதான்..

பின்னர்தான் மற்ற எல்லாமே….தன்னுடைய பணியில்..நிர்வாகத்தில் விரும்பதகுந்த மாற்றத்தை கொண்டுவந்தேயாகவேண்டிய கட்டாயம்… இல்லாவிட்டால் எப்படி அவரால் நிம்மதியாக உண்டு உறங்கமுடியும்..

தனது மன உளைச்சலை அலட்சியபடுத்திவிடமுடியாது தான்தான் பெரிய ஆளாயிற்றே என்று…. முதல் கட்டத்திலேயே..அவ்வப்போதே அதனை களைந்தாகவேண்டும்.

இல்லையேல் துன்பத்தை அனுபவிக்கவேண்டிவந்துவிடும்..
அந்த நிலையால் அடுத்தவருக்கும்..அவரை சார்ந்தவர்களுக்கும்..நம்பியிருப்பவர்களுக்கும் பிரச்சனைதான்

மன உளைச்சலினால் பிரச்சனையை திறமையாக கையாளமுடியாமலும் போகலாம்… வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் தோல்வியை அடையலாம்…

ஒரு நிர்வாகி தன்னுடைய மன உளைச்சலை சமாளிப்பதுதான் அவரது மற்ற நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமையும்…

மன உளைச்சலுக்கான புறகாரணிகளை விடுத்து… தான்மட்டுமே அதற்கு எத்தனை பொறுப்பாளி என்பதை உணர்ந்து செயலாற்றுகின்றவர்தான்..அதனை முழுமையாக வென்றுவரமுடியும்…

அதனைதான் யாருமே செய்வதில்லை..தவறு தனதேயாகினும்… உடனடியாக வேறு காரணங்களை தேடுவதிலும்..அதனை நியாயபடுத்துவதிலும்தான் தான் நமது மனம் யோசிக்குமே தவிர…

யாருமே மனமுவந்து தனது தவறை ஒப்புகொண்டு அதற்கான பொறுப்பேற்று செயலாற்றுவது..கொஞ்சம் குறைவுதான்…

யாருமே…தன் மனஅளவில்..தான் பெரிய ஆள்… தான் சொல்வதும்..தனது சிந்தனையுமே சரியானது… எல்லோரும் தனக்கு கீழ்படிந்துதான் நடக்கவேண்டும்…

தான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்..நமக்கு அசொளகரியம் ஏற்படாதவாறு..யாருமே தனக்கு கீழ்படிந்து அட்ஜஸ்ட் பன்னிதான் நடக்கவேண்டும்…

என்னை சந்தோஷபடுத்தவேண்டியதுதான் மற்றவர்களது கடமை என்ற எண்ணமெல்லாம் நம்மைவிட்டு ஒதுக்கிதள்ளாதவரை…மன உளைவிலிருந்து யாருமே காப்பாற்ற இயலாது….

புரிந்து நடந்துதான் பார்ப்போமே….