
நாம் இன்னும் சற்று அதிகமாய் சிரித்து பழகவேண்டும்….. துன்பங்களின் வீரியத்தை சற்று குறைவாகவே உணரவேண்டும்…..
அதுவே நம்மை மன ஆரோக்கியத்துடனும்… நீண்ட ஆயுளோடும் வாழசெய்யும்….
மனம் விட்டு சிரித்த தருணங்களை எப்போதும் மறவாமல் பொக்கிஷம்போல் பாதுகாத்து..எப்போதும் அந்த நினைவலைகளிலேயே திளைக்கவேண்டும்…
துன்பங்கள் நம்மை அதிகம் தொந்தரவு செய்யாமல் அது பாதுகாப்பாய் இருக்கும்….
துன்பம் தாங்கமுடியாத அளவிற்கு சூழ்ந்திருக்கும் வேலையிலும்..வேலை பலுவோ..மற்ற பிரச்சனைகளோ நம்மை களைப்படைய செய்யும்போது…
எப்போதோ அனுபவித்த சந்ததோஷமான தருணங்களை மனதினுள் அசைபோட்டு..மனதிற்குள்ளேயே…. அந்த நிகழ்வுகளை மீண்டும் ஓட்டிபாருங்கள்….
மீண்டும் ஒருமுறை ஒரு குட்டி பிக்னிக் போனாமாதிரியோ.. சந்தோஷமாக ஒரு நிகழ்வினை அனுபவித்த மாதிரியோ..ஒரு ஃபிரஸ்னஸ் நம்மிடம் ஓடோடிவந்து ஒட்டிகொண்டு..முகத்தில் புன்னகையை உட்காரவைக்கும்….
வேதனையும்..களைப்பும் ஆயாசமும்…. அடுத்த ஆளை பார்க்க போய்விடும்…
ஒன்றை பெறவேண்டும்…அடையவேண்டும் என்ற தாகம் இருக்கலாம்…. அதுவே ஏக்கமாக மாறி நம்மை தொந்தரவு செய்ய அனுமதிக்கவேகூடாது….
எப்போதும் எதையாவது நினைத்து கவலைபட்டுகொண்டே இருப்பதை விடுத்து… குழப்பமான நேரங்களில் தனிமையில் சில நேரம் சிந்தித்தாலே போதும்.. தீர்வும் அமைதியும் கிடைக்கும்….
நம் வாழ்வு சொர்க்கமாக….ஜொலித்து மகிழ்விப்பதும்… நரகமாக வேதனைபடுத்துவதும் நம் கையிலேயேதான்… கொஞ்சம் தனிமையில் சிந்தித்து பார்ப்போமே…