Header Banner Advertisement

“நீ என்னை ஏற்றுக்கொள்வாய்…”


www.villangaseithi.com

print
“அன்பே… நீ நலமாக இருக்கிறாய் என்று அறிவதை விட வேறு எதுவும் என்னை சந்தோஷமாக வைத்திருக்க முடியாது. நீ அருகில் இல்லாததால் தோட்டத்தையும் பூக்களையும்கூட ரசிக்க முடியவில்லை. நீ இன்னும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட உன் நினைவுகளை சுமந்தபடியே நான் வாழ்கிறேன்.
மேரி க்யூரி
நாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் விஞ்ஞானத்திலும் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயங்கள் படைப்போம். உனது கனவை நிறைவேற்றித்தரும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. நீ என்னை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்…”

– இது மேரிக்கு, ப்யூரி க்யூரி எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி. இக்கடிதத்துக்குப் பிறகுதான் இருவரும் காதலராகி மணம் செய்து கொண்டனர். கடிதத்தில் எழுதியவாறே அறிவியலில் பல சாதனைகள் படைத்து நோபல் பரிசும் பெற்றனர். இக்கடிதம் எழுதப்பட்ட நாள்: ஆகஸ்ட் 10, 1894.