
யாருமே ஒரு எல்லைக்குமேல்..ரொம்ப பொறுப்பா..சீரியசா வாழ ஆரம்பிச்சுடறோம்… சின்ன சின்ன விளையாட்டு.. சிரிப்பு.. சந்தோஷம்.. குழந்தை தனமாக சேட்டைகள் எல்லாவற்றையும் பார்த்து ரசிக்ககூட தயங்கி நேரமில்லாமல் ஒதுங்கியே விடுகின்றோம்…
ஆனால் உள் மனதில் சிறுவயதில் செய்த சேட்டைகள்.. விளையாட்டுகள்… ரசித்து மகிழ்ந்த நினைவுகள் எல்லாம் ஆப்படியேதான் இருக்கும்..நினைவாக மட்டுமல்ல… எப்பவும் விருப்பமாகவும்தான்…
எவருமே ஒரு கட்டத்தில்..அல்லது ஒரு சிலரிடம் மட்டும் குழந்தையாகவே மாறிவிடுவோம்… அந்த இடத்தில் நமது பேச்சும் செயலும் சிறு குழந்தை தனமாகவும்.. நமது முகமும் சிரிப்பும்கூட வழக்கத்திற்கு மாறாக சிறுபிள்ளைதனமாகவே காணப்படும்…
இப்பொழுது பேரபிள்ளைகள் கூட இருக்கலாம் அவருக்குமே இதே நிலைபாடு வரவாய்ப்புகளுண்டு… சரியான நேரம் வரும்பொழுது.. தன்னுடைய அபபேதைய நிலை மறந்தே போகும்..
உதாரணமாக தனது பிள்ளைகளையோ… பேரபிள்ளைகளையோ விளையாட பார்க்குக்கோ வேறு பொழுதுபோக்கு இடங்களுக்கோ விளையாட அழைத்து செல்வர்… ஆனால் அங்கே கூட அவர்களுக்கு விளையாட்டு காட்டுவதாக ஒரு காரணம்தான்.. மகிழ்ந்து சேர்ந்தே விளையாடுவர்..மனம் லேசாகும்.. உற்சாகமாகும்..
அந்த இடத்தில் பிள்ளையின் உற்சாகம் பெரியவர்களிடமும் தொற்றிக்கொள்ளும்…அந்த நேரத்தில் தம்முடைய மற்ற பிரச்சனைகள் ஞாபகத்திற்கு வருவதே இல்லை…
ஒரு ஊஞ்சலை பார்த்தால் இது நம்மை தாங்குமா என்ற அச்சம் மட்டும் வருமே தவிர..விரும்புவோம் உட்காருவோம்.. லேசாக.. பின்னர் சரியாக.. பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிபார்ப்போம்…
எப்போதும் குழந்தையாக இருப்பதும் பொருந்தாது… எப்பொழுதாவது… இப்படிபட்ட பரபரப்பான வாழ்க்கையில் டென்ஷனில்லாம்ல்.. நோய்களில்லாமல் நிம்மதியாக வாழ அவ்வப்பொழுது குழந்தைகளாகவும் மாறிவிடுங்கள்..
எந்த தயக்கமும் வேண்டாம்.. யாரும் எதுவும் சொல்வார்கள் என்ற கவலையும் வேண்டாம்..எல்லோரிடமுமே அந்த குழந்தை ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது…
அந்த குழந்தையும் உங்களை பார்த்து தானும் தலையெடுத்து விளையாடும் மகிழும்…
சிடுசிடுப்பையும்… கடுப்பையும் மறந்து.. அவ்வப்பொழுது குழந்தையாக மாறி மனம் லயித்திருப்பது நல்லதே..நோயற்ற வாழ்வை தரும்…
நான்கூட அவ்வப்போது குழந்தையாக மாறிவிடுவதும் உண்டு நீங்களும் முயற்சித்து பாருங்களேன்..