Header Banner Advertisement

படமாக்கல் மற்றும் திரையிடல் – அளவு விகிதம்

002

print

திரைப்படக்கலை உருவான ஆரம்பகட்டங்களிலேயே படமாக்குவதற்கும் அதை திரையிடுவதற்கும் அளவுகோள் ஒன்றை உருவாக்கினர். இந்த அளவுகோலானது அகலம் மற்றும் நீளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது (width: height).

உதாரணம் : இன்று விடியோவில் பிரபலமாக இருக்கும் 16:9 என்ற அளவு விகிதத்தில், 16 புள்ளிகள் அகலத்தையும், 9 புள்ளிகள் நீளத்தையும் குறிக்கிறது.

1890 ல் வில்லியம் கென்னடி டிக்ஸன் என்பவர் திரையிடலுக்கான அளவு விகிதத்தைக் கண்டறிந்தார். இவர் சினிமாவின் தந்தையாகக் கருதப்படும் தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வரங்கில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர்.

கொடாக் நிறுவனம் செல்லுலாய்ட் ஃபிலிம் தயாரிக்க ஆரம்பித்தவுடன் அதை தாமஸ் ஆல்வா எடிசன் தனது கினடாஸ்கோப்பில் பயன்படுத்த எண்ணினார். பல பரிசோதனை முயற்சிகளுக்குப் பின்பு வில்லியம் கென்னடி டிக்ஸன் 35 மில்லி மீட்டர் ஃபிலிம் அளவைக் கண்டறிந்தார்.

ஒரு ஃபிரேமின் அளவானது 0.95 அளவு அகலமும் 0.735 இன்ச் நீளமும் கொண்டதாகும் (image size). இதை 1:1.33 என்று கணக்கிட்டார்கள்.

ஃபிலிமின் ஓரத்தில் காணப்படும் நான்கு துவாரங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு ஃபிரேமின் அளவு கட்டமைக்கப்படுகிறது. 1927 ம் ஆண்டு வரை மெளனப்படங்களின் காலகட்டமாக இருந்தது. அப்போது காமிராக்களும் ப்ரொஜெக்டர்களும் 35 மில்லி மீட்டர் ஃபிலிம் பயன்படுத்திவந்தது. அதன் அளவு விகிதம் 1:1.33.

1907 ம் ஆண்டு சினிமா தொழில்நுட்பத்திற்கான பொது விதிமுறை உருவாக்கப்பட்டது (Motion picture patent’s agreement 1907). அதில் முக்கியமானவை ஒரு ஃபிரேமின் அளவு 1:1.33 வடிவத்தில் நான்கு துவாரங்களுக்குள் (4 perforation) உட்படவேண்டும். அந்த துவாரங்களானது ஃபிலிமின் ஓரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். அது காமிரா மற்றும் ப்ரொஜெக்டரில் செலுத்தி இயக்க உதவும்.

திரை வடிவம் எப்படி ஒரு பொது விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டதோ அதேபோல, காமிரா இயக்கத்தின் வேகமும் சீராக்கப்பட்டது. அதாவது மோட்டார் மூலம் காமிராவை இயக்கும் காலகட்டத்திற்கு முன்னர் சினிமா காமிராக்கள் அதில் உள்ள நெம்புகோலை (lever) கைகளால் சுற்றியே ஒளிப்பதிவு காமிரா கருவிகளை இயக்கினர்.

சினிமா காமிராக்களை பொதுவான வேகத்தில் இயக்கவும் பின்னர் ப்ரொஜெக்டரில் அதே வேகத்தில் இயக்க முக்கிய கட்டளைகள் உருவாக்கப்பட்டன. ஒரு நொடிக்கு இரண்டு சுற்று வேகத்தில் காமிராவை இயக்க வேண்டும். அது ஒரு நொடிக்கு சுமார் 16 ஃப்ரேம்களை பதிவு செய்யும். பின்னர், மோட்டாரால் இயக்கும் காமிராக்கள் தயாரிக்கப்பட்டன.

சினிமா பேசும் படமாக மாறும்போதுதான் நொடிக்கு 24 ஃபிரேம்களில் பதிவு செய்வதும் / ப்ரொஜெக்டரை இயக்குவதுமாக மாறியது. இன்றளவும் அந்த விதிமுறை பயன்படுத்தப்படுகிறது.

சில முக்கிய காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு படமாக்கும்போது காமிராவின் ஃபிரேம் ரேட்டை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.

உதாரணம் : ஸ்லோமோஷன் (slow motion) காட்சிக்கு காமிராவின் ஃப்ரேம் ரேட் வேகத்தை கூட்ட வேண்டும். ஆனால், ப்ரொஜெக்டர் என்றும் சீரான வேகத்திலேயே இயக்கப்படும்.

1932 ம் ஆண்டு திரைப்படத்துறையை மேம்படுத்த அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் நிறுவப்பட்டது.

திரைப்படங்கள் பேசும் படங்களான பிறகு ஃபிலிமில் ஒளியைப் பதிவு செய்ய ஒரு ஃபிரேமின் அளவு விகிதத்தை 1:1.37 என்று மாற்றியமைத்தனர். அதுவே பொதுவான விதிமுறையாகக் கொண்டு காமிராக்களும் திரையரங்குகளும் இதன் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டன. இந்த அளவு விகிதம் படமாக்குவதற்கும், திரையிடுவதற்கும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
1950 களில் தொலைக்காட்சியின் வரவையொட்டி மீண்டும் அதற்கேற்றவாறு 4:3 மற்றும் 16:9 போன்ற வடிவங்கள் உருவாயின. தொலைக்காட்சியின் தாக்கம் திரைப்படத்துறையை வெகுவாக பாதித்தது. திரைப்பட ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கவும் வசீகரிக்கவும் அகன்ற திரை (wide screen format) வடிவத்தை உருவாக்கினர்.

குறிப்பாக, 20த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாஸ்கோப் என்ற அகன்ற திரை வடிவத்தை 1953 ம் ஆண்டு தி ரோப் (The Robe) திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினர். இந்த சினிமாஸ்கோப் முறையானது 35 எம் எம் ஃபிலிம் மற்றும் காமிராக்களையே பயன்படுத்துகிறது. ஆனால் அகன்ற திரைப்பார்வை கொண்ட அனமார்ஃபிக் லென்சுகளை காமிராவிலும் ப்ரொஜெக்டர்களிலும் பயன்படுத்துகிறது. இதன் அளவு விகிதம் 1:2.35 ஆகும்.

சினிமாஸ்கோப் முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இதனால் திரையரங்குகளில் திரை அளவும் ஃப்ரொஜெக்டர்களும் மாற்றியமைக்கப்பட்டன.

அதன் பிறகு பல அகன்ற பார்வை கொண்ட திரைவடிவங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, சூப்பர்ஸ்கோப், டெக்னிரமா, விஸ்டாரமா, சினிரமா, டாட் ஏ ஓ, விஸ்டாவிஷன், 70 எம் எம், சூப்பர் பேனா விஷன், ஐ மேக்ஸ் போன்றவை மூலமாக ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட அனுபவத்தைக் கொடுப்பதற்காக பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது இவற்றில் சினிமாஸ்கோப்பும், ஐ மேக்ஸும் மட்டுமே இன்றளவில் பயன்பாட்டில் உள்ளன.

சினிமாஸ்கோப் முறை பெரும் வரவேற்பை பெற்றதையொட்டி இந்தியாவில் குரு தத் இயக்கிய காகஸ் கி பூல் என்ற இந்திப்படம் கருப்பு வெள்ளையில் சினிமாஸ்கோப் படமாக 1959 ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை ஒளிப்பதிவு செய்தவர் பால்கே விருது பெற்ற ஒளிப்பதிவு மேதை வி.கே.மூர்த்தி அவர்கள்.

தமிழிலும் 1970 களில் சிவாஜி கணேசன் நடிப்பில் வரலாற்றுப் படமான ராஜ ராஜ சோழன் திரைப்படம் வெளிவந்தது.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படங்கள் 70 எம் எம் மில் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் 1967 ம் ஆண்டு அரெளண்ட் த வோல்ட் என்ற இந்திப்படம் 35 எம் எம் அளவில் படமாக்கப்பட்டு அதை 70 எம் எம் பிரதிகளாக வெளியிட்டார்கள். அதன் அடிப்படையிலேயே ஷோலே திரைப்படமும் வெளியானது.

தென்னிந்தியாவின் முதல் 70 எம் எம் திரைப்படமாக படையோட்டம் என்ற மலையாளத் திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அது படமாக்கப்பட்டபோது சினிமாஸ்கோப் முறையிலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

சினிமாஸ்கோப் முறை தமிழில் 70 களிலேயே அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவை பிரபலமானது 80 களின் இறுதியில்தான். அதற்கு முக்கிய காரணம், சென்னை அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களின் தொழில்நுட்ப பங்களிப்போடு ஆபாவாணன் தயாரித்த ஊமை விழிகள் திரைப்படம் (ஒளிப்பதிவு ரமேஷ்குமார்) மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அதன்பின் தயாரான ஏனைய தமிழ்ப்படங்கள் அனைத்தும் சினிமாஸ்கோப்பிலேயே உருவாக வழிவகுத்தது.

70 களில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் 35 எம் எம் ஃபிலிமில் படமாக்கி அதில் 1:1.66 என்ற அகன்ற திரை வடிவத்தை இந்தியாவில் பிரபலமாக்கினார்.படமாக்கல் மற்றும் திரையிடல் – அளவு விகிதம் (Aspect Ratio)

70 களில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் 35 எம் எம் ஃபிலிமில் படமாக்கி அதில் 1:1.66 என்ற அகன்ற திரை வடிவத்தை இந்தியாவில் பிரபலமாக்கினார்.

– ஸ்ரீனிவாசன் –