
யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர் ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரமே யானையாலும் இருக்க முடியும்.
யானை மூச்சு விடுவது தும்பிக்கையினால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான். வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையில் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்றிருக்கிறது.
ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நின்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கைதான்.
யானை பன்றி இனத்தை சேர்ந்தது. முதலில் தோன்றிய யானை பன்றி அளவே இருந்ததாம். ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து, பின்பு அதுவே துதிக்கையாக வளர்ந்ததாம்.
யானையின் உடலில் துதிக்கை எட்டாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஒரு குச்சியை பிடித்து சொரிந்து கொள்ளும். யானையால் மற்ற விலங்குகளைப் போல் நான்கு கால்களால் ஒரு இடத்தை தாண்டமுடியாது. நன்றாக பழகிய யானைப்பாகன் சொல்லும் சில வார்த்தைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப யானைகள் நடந்து கொள்கின்றன என்பது உண்மையே!