Header Banner Advertisement

பதவி நாற்காலிக்கு மேல் ஒரு கத்தி…!


www.villangaseithi.com

print

சிசிலித் தீவு, இத்தாலியின் தென் முனையில் இருக்கிறது. அதை டயனாசியஸ் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த சமயத்தில் டெமாக் கிள்ஸ் என்ற அறிஞன் ஒருவனும் அந்த நாட்டில் இருந்தான். அரசனின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் குத்தலாகப் பேசுவது அந்த அறிஞனின் வழக்கம். இது காதில் விழுந்து எரிச்சலான மன்னன், டெமாக்கிள்ஸ§க்கு பாடம் கற்பிக்க நினைத்தான். ‘நீங்கள் அரண்மனைக்கு வரவேண்டும். மன்னர் உங்களுக்கு விருந்து வைப்பார். அன்று ஒருநாள் மட்டும் நீங்கள் இந்த நாட்டின் மன்னராக இருக்கலாம்!’ என்று அழைப்பு வந்தது.

குறிப்பிட்ட நாளில் டெமாக்கிள்ஸ் வந்தான். சொன்னபடியே ராஜ மரியாதைத்தான். மன்னருக்கான உடைகள் அணிவிக்கப்பட்டன. அரச மண்டபத்தில் டயனாசியஸ§க்கு சமமாக டெமாக்கிள்ஸ் உட்கார வைக்கப் பட்டார். தனக்குத் தரப்பட்ட மரியாதையில் நெகிழ்ந்து பொங்கிப்போனார். தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். திடீரென மேலே பார்த்தார். தலைக்கு மேலே பெரிய கத்தி ஒன்று தொங்கி கொண்டு இருந்தது. எப்போது வேண்டுமானா லும் விழலாம் என்ற நிலையில்! குதிரையின் வாலில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை முடியில் அது ஊசலாடிக் கொண்டு இருந்தது.

அதற்குப் பிறகு சாப்பாடு, சந்தோஷம் எதுவும் உள்ளே போகவில்லை டெமாக்கிள்ஸ்க்கு. மன்னன் எப்போதும் போல உற்சாகமாகவே இருந்தார். டெமாக் கிள்ஸின் நினைப்பெல்லாம் தலைக்கு மேல் தொங்கும் வாள் மீதே! மன்னரிடம் கவனம் செலுத்திப் பேசக்கூட முடியவில்லை. கடைசியாக மன்னன் சொன்னான்… ‘அதிகாரம் என்பது நீங்கள் எட்டி நின்று பார்க்கிற மாதிரி சுகமானது அல்ல. எந்த நேரமும் எதுவும் நடக்கும்… கண்ணுக்குத் தெரியாத ஒரு கக்தி தொங்கிக் கொண்டே இருக்கும். நிம்மதிக்கே வழியில்லை!’ ‘டெமாக்கிள்ஸ் ஸ்வார்டு’ என்ற வார்த்தையே இந்தக் கதையில் இருந்துதான் பிரபலம் ஆனது!