Header Banner Advertisement

பனிச்சரிவு என்ற பயங்கரம்.!


www.villangaseithi.com

print
பனிச்சரிவு பற்றி தெரியும் முன், பனிக்கட்டியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பனிக்கட்டி என்பது சாதாரண நீர், குளிர் நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவது. வெப்பநிலை, ‘0’ டிகிரி செல்சியசை விட, குறையும் போது, பனிக்கட்டி உருவாகின்றது. அதிகளவிலான பனிக்கட்டிகள், ஒன்று சேர்ந்து உயரமான மலைப் பகுதிகளில் படர்ந்திருக்கும்.

இப்பனிக்கட்டிகள் சரிவதுதான், பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும் போது மிக வேகமாக கீழ் நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கின்றது.

பனிச்சரிவு, மூன்று விதங்களில் நிகழ்கிறது., 1. ஈரமான பனி: இது வசந்த காலத்தின் (ஸ்பிரிங்) போது அடிக்கடி நடைபெறும். பனி உருகும்போது இச்சரிவு ஏற்படுகிறது. இது மெதுவாக சரியும் இயல்புடையது. 2. உலர்ந்த பனி: இவ்வகைப் பனிச்சரிவு ஆபத்தானது. வேகத்தில் கூட சரியும். கூடவே கடும் குளிர் காற்றும் வீசும். 3 பனிப் பாளம் (Slab Avalanche): இது திடீரென, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக சாய்வான பகுதிகளில் சரியும். பல நூறு கி.மீ., தூரத்துக்கு இது தொடர்ந்து சரியும்.

எப்படி தடுப்பது?

பனிச்சரிவு, திடீரென நிகழும் இயற்கை சீற்றம். இதைத் தடுக்க முடியாது. இருப்பினும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், பாதிப்புகளை குறைக் கலாம். மலைப்பகுதிகளில் அதிக மரங்களை நடுவது, தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துவது போன்றவை மூலம் பாதிப்பை தடுக்கலாம்.
முக்கிய பனிச்சரிவுகள்:

 1910, மார்ச் 10: அமெரிக்காவில் வாஷிங்டனில் நிகழ்ந்த பனிச்சரிவில் 96 பேர் பலி.
 மார்ச் 14: கனடாவில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டி ருந்தபோது, ஏற்பட்ட பனிச்சரிவில் 62 பேர் பலி.
 முதலாம் உலகப்போரின் போது 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் பனிச் சரிவில் இறந்தனர்.
 1950-1951: ஆஸ்திரியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் 649 முறை பனிச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 265 பேர் பலியாகினர்.
 1990: கிர்கிஸ்தானில் நடந்த நிலச்சரிவில் 43 பேர் பலியாகினர்.
 1993: துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 60 பேர் பலியாகினர்.
 1999: பிரான்சில் பெரிய அளவிலான பனிச்சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிலான பனிக்கட்டிகள் சரிந்தன.
 2012 ஏப்ரல் 7: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சியாச்சின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 135 பாகிஸ்தான் வீரர்கள் பலி.