Header Banner Advertisement

பயத்தம் பருப்பு தால் ஃப்ரை செய்முறை


002

print

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 3, 4
வெங்காய இலை – 1 கட்டு (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3,4 பல்
மஞ்சள் தூள்
சாம்பார்ப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய் – 1
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்

செய்முறை:

பயத்தம் பருப்பை, சாம்பார்ப் பொடி. மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.

பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் வெங்காய இலையைச் சேர்த்து ஒரு நிமிடம் (சுண்டும் வரை) வதக்கவும்.

பொடியாக அரிந்த தக்காளியை உப்புடன் சேர்த்து வதக்கவும்.

வேகவைத்த பருப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

இஞ்சி, பூண்டை மட்டும் அரைத்தும் சேர்க்கலாம்.

சாம்பார்ப் பொடி இல்லாதவர்கள் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் சாம்பார்ப் பொடி அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் சாம்பார்ப் பொடியை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும். தக்காளி சேர்ப்பதால் நிறம் மாறும். அது அழகான மாற்றம், பரவாயில்லை.

விரும்புபவர்கள் இஞ்சி பூண்டு அரைக்கும்போது சின்ன வெங்காயம் ஐந்தாறு சேர்த்து அரைத்துவிடலாம். மணமாக இருக்கும்.

எந்த வெங்காயமுமே இல்லாமலும் இதைத் தயாரிக்கலாம்.

ஆறியதும் அதிகமாக இறுகும்.

.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…

============================================================

பயத்தம் பருப்பு தால் ஃப்ரை – 2

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
கிராம்பு – 3, 4
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்

செய்முறை:

n

பயத்தம் பருப்பை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், கிராம்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.

பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பருப்பும் உப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

அநேகமாக ஹோட்டல்களில் பரிமாறப்படும் ‘தால்’ இந்த முறையிலேயே தான் இருக்கும். விரும்பினால் சில துளிகள் எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளலாம்.

கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் மிளகாய்த் தூளை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…