
பயம்..கோபம்…. இவற்றைபோல் நம் மன அமைதியை பறிப்பது வேறு எதுவுமே இருக்கமுடியாது…
உண்மையில் நாம் பயப்படவேண்டியது…பயத்தை பார்த்துதான்… ஏனெனில் நமது பெரும்பாலான நல்ல விஷயங்களை..செயல்களை..நமது பலத்தை இந்த பயம்தான் உறிஞ்சிவிடுகின்றது….
நம்மை மிக பலவீனபடுத்தி ஒன்றும் செய்ய இயலாதவராக்கிவிடுகின்றது…. எத்தனையோ இழப்புகளும் இதனாலேயே ஏற்படுகின்றது…
பயம் அந்த பயத்தினால் ஏற்பட்ட தயக்கம்… போதாதா..நம்மை படுகுழியில் தள்ள…
சாதாரணமாக…ஒரு எச்சரிக்கை உணர்வு…
நம்பகதன்மை இல்லாதது.. ஆபத்து..வலி போன்றவைகளினால்தான் பயம் வருகின்றது…
நமது நம்பிக்கை உணர்வை வளர்த்துகொள்வதின் மூலமும் அறியாமையை விரட்டுவதின் மூலமும்…கொஞ்சம் மாற்றங்களை கொண்டுவரலாம்…
மிக கோபமாகவோ…பயத்துடனோ குழப்பமாகவோ இருக்கும்போது… செல்ஃப் ட்ரைவ் பன்னுதல்… வன்முறைகள் நிறைந்த காட்சிகளையோ படங்களையோ பார்ப்பதை தவிர்த்துவிடலாம்….
யார்மீது கோபமோ… பிரச்சனையோ… அவரிடம் சரிக்கு நிகர் சரியாக மல்லுகட்டிகொண்டு நிற்பது…அவரை மேலும் ஆக்ரோஷபடுத்துகிற வார்த்தைகளை உபயோகபடுத்தாமல் இருப்பது…அவரை பயமுறுத்துகிற ஆயுதங்களை… பொருட்களை கையில் பிடித்திராமல் இருப்பது… அவரைவிட்டு 10 அடி தள்ளியே நிற்பது..இவையெல்லாம் சமயத்தில் நன்மை பயக்ககூடியவை… மேற்கொண்டு ஆபத்து நடவாமல் இருக்க உதவும்
இன்னும் சொல்லபோனால்..அந்த இடத்தைவிட்டே நகர்ந்துவிடுவது..நலமோ….நலம்…
அதற்கு மேல்…நல்ல குளிர்ந்த நீரில் தலையோடு குளித்து.. நல்ல உணவுகளை சாப்பிட்டு..நிம்மதியாக காற்றோட்டமான அறையில் நல்ல இசையை கேட்டுகொண்டு கண்மூடி அமர்ந்திருத்தல் நல்ல மாற்றத்தை தரும்…
முயற்சிப்போமே……